கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய அனுமதி.. கல்வி துறை அமைச்சர் சுதாகர் முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் சுதாகர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது. கடந்தாண்டு ஜனவரியில் உடுப்பியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுக்க பரவியது. இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு பக்கம் இருக்க அங்குள்ள மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குச் செல்ல தொடங்கினர்.
இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இறுதியில் மாணவிகள் உரிய யூனிபார்ம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு விளக்கம் அறிவித்தது.
இப்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவிகள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் குறித்து தற்போதைய கர்நாடக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர் சுதாகர், "ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்" என்று அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications