கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர்தான்.. கணித்து கூறிய நாய்! ஒருவேளை இருக்குமோ? களம் பொருந்துதே?ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து நாய் ஒன்று கணித்து கூறியுள்ளது. இது களஎதார்த்தத்துடன் பொருந்தும் நிலையில் உண்மையில் பலிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி வருகின்றன.
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டியாக கால்பந்து உள்ளது. இருஅணிகள் மோதும் கால்பந்து போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பல பிராணிகள் கணித்து சொல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக ஆக்டோபஸ், பூனை உள்ளிட்டவை பல கால்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளை சரியாக கணித்து கூறியுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு ஹை வோல்டேஜ் கேம்களில் இந்த கணிப்புகள் முக்கியமாக கவனம் பெறும்.
கணித்து கூறும் நாய்: இந்நிலையில் தான் மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுதுதொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த கருத்து கணிப்புகளை செய்தி நிறுவனங்கள், கருத்து கணிப்பு நடத்தும் அமைப்பினர் மேற்கொண்டு ரிசல்ட்டை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பல ஆண்டுகளாக வெவ்வேறு வகையான கணிப்புகளை வெளியிட்டு வரும் நாய் முதல் முதலாக கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:
அடுத்த முதல்வர் யார்: கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் கோபி. இவர் ஸ்ரீகாலபைரவரின் தீவிர பக்தர். இவர் செல்லபிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு பைரவா என பெயர் வைத்துள்ளார். ஒவ்வொரு வாரமும் ஸ்ரீகாலபைரவருக்கும், தான் வளர்க்கும் பைரவாவுக்கும் அவர் பூஜை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் கோபி கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்கள்? என்பது பற்றிய கணிப்பை நடத்த முடிவு செய்தார்.
நாயின் தேர்வு என்ன: இதற்காக அவர் தான் வளர்க்கும் நாயை பயன்படுத்த முடிவு செய்தார். இந்த நாய் தெய்வ சக்தி கொண்டதாகவும், மழை சார்ந்த கணிப்புகளை சரியாக கணித்து உள்ளதாகவும் கோபியின் குடும்பத்தினர் கூறினர். இதனால் தான் நாய் மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக யார் வருவார்கள்? என்பதை கணிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். அதன்படி கோபி ஸ்ரீகாலபைரவர் மற்றும் பைரவா நாய்க்கு பூஜை செய்தார். அதன்பிறகு கர்நாடகாவின் அடுத்த முதல்வராக வர வாய்ப்புள்ள தலைவர்களின் போட்டோக்களை நாயின் முன்பு வைத்தார். அதன்பிறகு கர்நாடகா முதல்வராக அடுத்து யார் வருவார்கள்? அவர்களின் போட்டோவை எடுக்கும்படி தனது நாயிடம் கூறினார்.
குமாரசாமி போட்டோ தேர்வு: இதையடுத்து தனது அருகே இருந்த பாஜகவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வாய்ப்பு உள்ள டிகே சிவக்குமார், ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி உள்ளிட்டவர்களின் போட்டோக்களை உற்றுப்பார்த்தது. இதையடுத்து சிறிது நேர யோசனைக்கு பிறகு அவரது நாய் முன்னாள் முதல்வரான ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமியின் போட்டோவை கவ்வி எடுத்து வந்து கோபியிடம் கொடுத்தது. இதன்மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக குமாராசாமிக்கு வாய்ப்புள்ளதாக கோபி தெரிவித்துள்ளார்.
களஎதார்த்தம் என்ன: கர்நாடகாவை பொறுத்தமட்டில் தற்போது பாஜக, காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. ஆனால் சில கருத்து கணிப்புகள் மட்டுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றனர். மாறாக பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனிப்பெரும் கட்சியாக உருவாகுமே தவிர மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என தெரிவித்துள்ளதோடு தொங்கு சட்டசபை தான் அமையும் என கூறுகின்றன. இவ்வாறு தொங்குசட்டசபை அமைந்தால் காங்கிரஸ், பாஜகவுக்கு ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். அப்படியென்றால் ஜேடிஎஸ் கட்சி முதல்வர் பதவி வேண்டும் என கூறும். வேறு வழியின்றி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஜேடிஎஸ்க்கு முதல்வர் பதவியை கொடுக்க முன்வரலாம்.
முன்பு நடந்தது என்ன: ஏனென்றால் கர்நாடகாவில் ஜேடிஎஸ் கூட்டணியில் முதல்வர் பதவியை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே விட்டு கொடுத்துள்ளன. கடந்த 2004ல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும், 2018ல் காங்கிரஸ் கட்சியும் ஜேடிஎஸ்க்கு முதல்வர் பதவியை கொடுத்தது. இந்த காலத்தில் முதல்வராக எச்டி குமாரசாமி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது நாய் குமாரசாமி அடுத்த முதல்வராகலாம் என கணித்து தெரிவித்துள்ளது.
*******
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications