‛ரெட்லைட்’.. பாஜகவுக்கு ‛செக்’ வைக்கும் சிலிண்டர்? தேர்தல் நாளில் கர்நாடகாவில் காங்கிரஸ் ‛சம்பவம்’
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு ‛செக்' வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சிலிண்டர் மூலம் ‛சம்பவம்' செய்து வருகிறது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளதோடு என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து நிற்கின்றனர். கர்நாடகாவில் என்ன நடக்கிறது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
Recommended Video
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து வருகிறது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர். மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மேலும் தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக மாறி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஜேடிஎஸ் கட்சி உள்ளது.
இந்நிலையில் தான் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 3 ஆண்டுகள் வரை மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமா முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500, 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

அதேவேளையில் ஆண்டுக்கு 5 காஸ் சிலிண்டர் வழங்குவதாக மாஜி முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும், உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகையயொட்டி 3 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவதாக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டு வந்தது. அதாவது காஸ் சிலிண்டர் விலையை பாஜக தான் உயர்த்தியது. தற்போது இலவச காஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
மேலும் மக்கள் மத்தியில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பூஜை செய்து பாஜகவுக்கு எதிராக பிரசார யுக்தியை காங்கிரஸ் மேற்கொண்டது. இந்நிலையில் தான் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் தனது தேர்தல் பிரசாரத்தில் விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை முக்கியமான பிரச்சனையாக முன்வைத்தார்.அதோடு காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அவர் நேற்று பூஜை செய்தார்.

அதோடு இன்று சட்டசபை தேர்தலில் ஓட்டு போட செல்லும்போது அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள காஸ் சிலிண்டரை கும்பிட்டு விட்டு வரும்படி கூறினார். அதன்படி இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபாடு நடத்தி பாஜகவுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் இளையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் நாளான இன்று பாஜக தலைவர்கள் கையை பிசைந்து நிற்கின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications