கர்நாடகா தேர்தல்.. பிரமாண்ட ராமர் கோவிலின் மாதிரி வீடியோ வெளியிட்ட பாஜக.. எப்படி இருக்கு? பாருங்க!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி 3டி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ராமர் கோவில் மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த வீடியோ மூலம் கர்நாடகாவில் இந்துக்களின் வாக்குகளை பெற பாஜக முயன்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு சட்ட போராட்டத்தை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை 2020 ஆகஸ்ட் 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மொத்தம் 110 ஏக்கரில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் அமைகிறது. இந்த பணிகள்விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி என்பது பாஜகவுக்கு அம்மாநிலத்தில் செல்வாக்கை பெற்று கொடுத்தது. இதனால் தான் யோகி ஆதித்யநாத் தலைமையில் 2வது முறையாக உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பு
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தொடர்பாக இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மே மாதம் 10ம் தேதி ஒரேகட்டமாக கர்நாடகா தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். மேலும் மார்ச் 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இதன்மூலம் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

கர்நாடகாவில் ராமர் கோவில்
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் மீண்டும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் வரும் என்ற தகவல்கள் வருகின்றன. சில கருத்து கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாடலில் கர்நாடகாவில் ராமர் கோவில் கட்ட பாஜக முடிவு செய்தது.

ரூ.120 கோடியில் கட்ட முடிவு
இதற்கான அறிவிப்பு சமீபத்திய கர்நாடகா பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதாவது ராமநகர் மாவட்டம் ராமதேவரா மலையில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டது. மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக பட்ஜெட்டில் ரூ.40 லட்சம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உத்தர பிரதேச பாணியில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பாஜக நம்புகிறது.

மாதிரி வரைபடம் வெளியீடு
மேலும் கோவிலுக்கான மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்டது. இதற்காக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தலைமையில் இந்த பணிகள் நடந்து வந்தது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ராமர் கோவில் அமையும் மாதிரி வரைபடம் 3டி வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இந்த படத்தை அமைச்சர் அஸ்வத் நாராயண் நேற்று வெளியிட்டார்.

என்னென்ன அம்சங்கள்?
அந்த வீடியோ 2 நிமிடம் வரை ஓடுகிறது. கோவிலின் வளாகம், மண்டபங்கள், கோபுரம், கோவில் மைய பகுதி கட்டடங்கள் பிரமாண்டமாக அமைய உள்ளது. சாலுமண்டபம், பிரமாண்ட கோபுரம், அனைத்து வசதிகளுடன் கூடிய படிக்கட்டு, சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், காட்சி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் தென் இந்தியாவின் ராமர்கோவில் என பக்தர்களால் அழைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.

வரலாறு என்ன?
மேலும் ராமநகரில் உள்ள ராமதேவரா மலைக்கு நிறைய வரலாறு உள்ளது. இங்கு ஸ்ரீ பட்டாபிராம கோவில் அமைந்துள்ளது. கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட ராமர் கோவில் உள்ளது. ராமரின் இடது மடியில் சீதா தேவி இருக்கிறார். இந்த சிலையை சுக்ரீவன் நிறுவியதாக நம்பப்படுகிறது. வனவாச காலத்தில் இங்கு சீதையுடன் ராமர் நான்கு முதல் 5 ஆண்டுகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இங்கு ராமர் கோவில் கட்ட பாஜக அரசு முடிவு செய்து முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ஒதுக்கியுள்ளதோடு, ராமர் கோவில் மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications