Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே கல்லில் 4 மாங்காய்.. கர்நாடகாவில் ஆம்ஆத்மிக்கு செக்.. 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்த காங்.,

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக, ஆம்ஆத்மி, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ‛செக்' வைத்தது உள்பட ஒரே கல்லில் 4 மாங்காய்களை அடித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சி அரியனையில் அமர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் செயல்பட தொடங்கி உள்ளன.

சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல்

சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல்

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பிற தலைவர்கள் கர்நாடகத்துக்கு விசிட் அடிக்க தொடங்கி உள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் பணி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 224 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. ஆம்ஆத்மி தலைவர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை

மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை


இன்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பஸ் யாத்திரையை தொடங்கினர். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 'பிரஜா த்வனி யாத்ரா' எனும் பஸ் யாத்திரை இன்று துவங்கியது. இந்நிலையில் தான் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 200 யூனிட் மின்சாரம்

200 யூனிட் மின்சாரம்

அப்போது டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேர்தலில் முதல் வாக்குறுதியாக இதனை தெரிவித்து வருகிறோம். பாஜக அரசு 10 மணிநேரத்துக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது. அதனை செய்ததா? என்றால் கேள்விக்குறி தான். கடந்த முறை நாங்கள் 7 மணிநேரத்துக்கு இலவச மின்சாரம் வழங்கினோம்'' என்றார்.
இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் திரு சித்தராமையா பேசுகையில், "ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்பது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல. இந்த 200 யூனிட் மின்சாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும், அதாவது அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும்'' என்றார்.

ஆம்ஆத்மி கட்சிக்கு ‛செக்’

ஆம்ஆத்மி கட்சிக்கு ‛செக்’

இந்தியாவில் டெல்லி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டெல்லியில் 200 யூனிட் வரையும், பஞ்சாப்பில் 300 யூனிட் வரையும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆம்ஆத்மி கட்சி குஜராத், இமாச்சல பிரதேசத்திலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. தற்போதைய சூழலில் ஆம்ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக உருவாகி உள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே கர்நாடகாவில் 200 யூனிட் இலவச மின்சாரத்தை அறிவித்து ஆம்ஆத்மி கட்சிக்கு ‛செக்' வைத்துள்ளது.

 பாஜக, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் சிக்கல்

பாஜக, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் சிக்கல்

இதேபோல் கர்நாடகாவிலும் பாஜக, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளன. இந்த கட்சிகள் சார்பில் இன்னும் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளது. இதனால் அந்த கட்சிகளும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் வாக்குறுதியை விட மக்களை கவரும் மாறும் மாற்று வாக்குறுதியை தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளும் பாஜக, ஜனதாதளம் (எஸ்), ஆம்ஆத்மி என 3 கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் 4 மாங்காய்

ஒரே கல்லில் 4 மாங்காய்

இதன்மூலம் 3 மாங்காய்களை தட்டிய காங்கிரஸ் எதிரியாக உருவாகி வரும் ஆம்ஆத்மிக்கு கைக்கொடுத்த அறிவிப்பை முந்தி கொண்டு கையில் எடுத்துள்ளதன் மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க துவங்கி 4வது மாங்காவையும் அடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் காங்கிரஸ் அறிவித்துள்ள 200 யூனிட் மின்சார திட்டத்தை போல் அல்லது அதனை கூட கூடுதல் இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பை கட்சிகள் வெளியிடலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆம்ஆத்மி கட்சி 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+