Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக விடுங்க.. நேரா கர்நாடகா தேர்தலில் களமிறங்கிய பா ரஞ்சித்.. கேஜிஎப் தொகுதி தான் குறியாமே! ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு போட்டியிட ஆர்வமாக உள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல்(கேஜிஎப்) தொகுதியில் நேரடியாக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் களமிறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்புகிறது. இதுதொடர்பாக அதிமுக காய் நகர்த்தி வருகிறது. பாஜக கூட்டணியில் தங்களுக்கு 3 சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் விரைவில் நடக்கும் செயற்குழுவில் இதுபற்றி கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Karnataka Election: Director Pa Ranjith supports to KGF Candidate Rajendran from Republic party of India

அதேபோல் ஓ பன்னீர் செல்வம் அணியும் கர்நாடகா அரசியலில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் புகழேந்தி இன்று பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு போட்டியிட வாய்ப்பு கோரினர்.

கேஜிஎப் தொகுதி: இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு கர்நாடகா தேர்தலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தான் தமிழக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தின் பார்வையும் அங்கு சென்றுள்ளது. அதாவது கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதியில் முக்கியமானது கோலார் தங்கவயல். இந்த தொகுதி கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் தங்கசுரங்கம் செயல்பட்டு வந்தபோது ஏராளமான தமிழர்கள் தொழிலாளர்களாக வந்து அங்கேயே வசிக்க தொடங்கினர்.

அதிமுக 3 முறை வெற்றி: இதனால் கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியை பொறுத்தமட்டில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்கள் தான் உள்ளனர். இதனால் தான் இந்த தொகுதியில் 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1983, 1989 மற்றும் 1999 தேர்தலில் அதிமுக சார்பில் பக்தவச்சலம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் தமிழரான ராஜேந்திரன் கடந்த 1994ல் பிஆர்பி சார்பிலும், கடந்த 2004 சட்டசபை தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பிலும் களமிறங்கி வெற்றி பெற்றார்.

பா ரஞ்சித் திடீர் விசிட்: தற்போது கேஜிஎப் தொகுதி எம்எல்ஏவாக ரூபகலா உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கேஎச் முனியப்பாவின் மகள் ஆவார். கேஜிஎப் தனி தொகுதியாக உள்ளதால மீண்டும் ரூபகலா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் இந்திய குடியரசு கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் போட்டியிட உள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் கோலார் தங்கவயலில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித், ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துள்னளர்.

Karnataka Election: Director Pa Ranjith supports to KGF Candidate Rajendran from Republic party of India

ரஞ்சித் கோரிக்கை: இதையடுத்து பா ரஞ்சித் கூறுகையில், ‛‛கேஜிஎப் வாழ் தமிழக மக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். கேஜிஎப் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அண்ணன் ராஜேந்திரன் நிற்க உள்ளார். ஏற்கனவே நம்மிடம் இருந்ததை நாம் இழந்துள்ளோம். நாம் இழந்த உரிமைகளை பெற வேண்டிய கட்டாயம், சூழல் தற்போது உள்ளது. இதனை மீட்டெடுக்கும் பொறுப்பு கேஜிஎப் தமிழர்களுக்கு உள்ளது.

நம்மிடம் உள்ள பலத்தை திரும்பவும் நிரூபிக்க முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நழுவக்விடக்கூாடது. ராஜேந்திரனை வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்கு முரண்பாடுகளை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தல் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்முடைய அரசியல் உரிமைகளை பெறுவதற்கு அவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டிய தேவை உள்ளது'' என கோரிக்கை வைத்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் பேசும் இந்த வீடியோ தற்போது இணயைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+