Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக முதல்வராவது உறுதி..கிரகங்கள் சாதகம்..ஜோதிடத்தை நம்பும் கிங் மேக்கர் குமாரசாமி..நடக்குமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அரியணை எனக்குத்தான்.. நான் முதல்வராவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் மதசார்பற்ற ஜனதா தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி குமாரசாமி. நவ கிரகங்களும் தனக்கு சாதகமாக இருப்பதாகவும், ஜோதிடர்களின் கணிப்பும் தான் முதல்வராக அரியணை ஏறுவேன் என்றும் கூறியுள்ளார். அவர் நினைப்பது போலவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி குமாரசாமிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடந்தது தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Karnataka Election Exit Poll Results 2023: CM post confirmed HD Kumaraswamy believes in astrology

224 தொகுதிகள் உள்ள கர்நாடக சட்டசபையில் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் மட்டுமே ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருடங்களே ஆட்சி நீடித்தது. பாஜகவின் ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்தது.

இதனையடுத்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.

கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் என தெரிவிக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான சேனல்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 97 முதல் 108 இடங்களில் வெல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆளும் பாஜக 89 முதல் 101 இடங்களில் வெல்லும் எனவும் ஜேடிஎஸ் கட்சிக்கு 21 முதல் 27 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 113 இடங்கள் தேவை. இந்த முறையும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கிங் மேக்கராக செயல்படுவார் ஹெச்.டி.குமாரசாமி. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதாக குமாரசாமியின் ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளார்களாம். அந்த நம்பிக்கையில்தான் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தனியார் இணைய தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் மட்டுமே போட்டி என்று வெளிப்படையாக தெரிந்தாலும் கிராமங்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தனக்கு சாதகமாக அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

தேசிய கட்சிகள் பணத்தை மட்டுமே நம்புகின்றனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நல்ல நிர்வாகத்தை தரவில்லை என்றும் குமரசாமி கூறியுள்ளார். கர்நாடக மக்கள் ஆச்சரியமான முடிவுகளை அளிப்பார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Karnataka Election Exit Poll Results 2023: CM post confirmed HD Kumaraswamy believes in astrology

அவரது நம்பிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று 'மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் பைரவா என்ற நாயை வைத்து கருத்துக்கணிப்பு நடத்தினார். கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான கோபி, சிறப்பு பூஜை செய்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என ஆருடம் கேட்டார். அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களில், குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்விய 'பைரவா' நாய், அடுத்த முதல்வரை கணித்தது.

யாருமே எதிர்பாராத அதிர்ஷ்டங்களுக்கு சொந்தக்காரர் என்றால் அது எச்.டி.குமாரசாமிதான். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைந்தது பெரும்பான்மை இல்லாமலேயே காங்கிரஸ் கட்சியின் தயவினால் முதல்வராக அரியணை ஏறினார். அவரது கிரக சூழ்நிலை அவரால் முதல்வராக நீடிக்க முடியவில்லை. காரணம் மிதுன ராசிக்காரர்களுக்கு அப்போது கண்டச்சனி, அஷ்டமத்து சனி காலமாக இருந்தது. அவரது பதவியும் பறிபோனது.

இப்போதைய சூழ்நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு சனியும், குருவும் சாதகமாகவே உள்ளது. பாக்ய சனி பதவியை தேடி தரும். லாப ஸ்தானத்தில் உள்ள குரு, தொட்டதை துலங்க வைக்கும். நினைத்த காரியங்களில் வெற்றியை தேடித்தரும். இப்போது மிதுன ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் 4 நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன.

இந்த கிரகங்களின் கூட்டணி மிதுன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான யோகத்தை தரப்போகிறது. குரு பகவானின் பார்வையும் 7ஆம் வீட்டின் மீது விழுவதால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியும் பலமாகவே அமையப்போகிறது. தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் முதல்வராவது நீங்கள்தான் என குமாரசாமிக்கு ஜோதிடர்களும் நம்பிக்கை கொடுத்துள்ளனர். அந்த நம்பிக்கையில்தான் தான் முதல்வராவேன் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார் குமாரசாமி.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ 130 இடங்களில் வென்று ஆட்சி பெரும்பான்மையுடன் அமைப்பது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். ஒருவேளை சில சீட்டுகளுக்காக மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அதிர்ஷ்ட காற்று குமாரசாமி பக்கம் வீசினால் கர்நாடக மாநில விதான் சபாவில் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்பார். வெல்லப்போவது குமாரசாமியின் ஜோதிட நம்பிக்கையா? அல்லது காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் நம்பிக்கையா? வரும் 13ஆம் தேதி தெரிந்து விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+