ரிசல்ட்டுக்கு முன்பே ட்விஸ்ட்.. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஜனார்த்தன ரெட்டி ஆதரவு.. திரும்பும் பாஜக!
பெங்களூர்: கர்நாடகாவில் தொங்குசட்டசபை அமைய அதிக வாய்ப்புள்ளது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவின் முன்னாள் அமைச்சரும், கல்யாண் ராஜ்ய பிரகதி கட்சியின் தலைவரும் ஜனார்த்தன ரெட்டி பரபரப்பாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல் முறையாக கடந்த 2008 ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்த சமயத்தில் பாஜகவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக வளர்ந்தவர் தான் ஜனார்த்தன ரெட்டி. எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் எடியூரப்பா முதல்வராக உதவி செய்தார்.

மேலும் எடியூரப்பா அமைச்சரவையில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பணபலம், அதிகார பலம் பெற்று வலம் வர தொடங்கினார். இந்நிலையில் தான் கனிம சுரங்க தொழிலில் ஈடுபட்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015ல் சிறையில் இருந்து ஜாமினில் ஜனார்த்தன ரெட்டி வந்தாலும் பாஜக அவரை சேர்த்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். ‛கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா' எனும் கட்சியை தொடங்கி 49 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஜனார்த்தன ரெட்டி கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியிலும், அவரது மனைவி லட்சுமி அருணா பல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டனர்.
பல்லாரி தொகுதியில் பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டியின் உடன்பிறந்த சகோதரர் சோமசேகர ரெட்டி எம்எல்ஏவாக இருந்த நிலையில் அவரை எதிர்த்து லட்சுமி அருணா போட்டியிட்டுள்ளார். மேலும் ஹைதரபாத்-கர்நாடகா மாவட்டங்களில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனால் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி உள்பட இன்னும் சிலர் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தான் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வந்தன. இதில் இந்தியா டுடே கருத்து கணிப்பில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மாறாக பிற கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்றாலும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நேற்று தேர்தலின்போது ஜனார்த்தன ரெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா முதல்வரானால் அவருக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‛‛கங்காவதி தொகுதியில் நான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மாநிலத்தில் 13 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெறும். பிற தொகுதிகளில் கடும் சவால் அளிப்போம்.
கங்காவதியில் நானும், பல்லாரியில் எனது மனைவியும் நிச்சயம் வெற்றி பெறுவோம். ரிசல்ட் வந்த பிறகு எங்களின் கட்சி ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்கும்பட்சத்தில் சித்தராமையா முதல்வரானால் நாங்கள் ஆதரவு வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications