Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக போலி வாக்குறுதி.. மணிப்பூர் நிலையை பாருங்க.. கர்நாடக வாக்காளர்களை எச்சரித்த ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். இரண்டு என்ஜின்களுமே தோல்வி அடைந்து விட்டன என்றும், கர்நாடக வாக்காளர்கள் போலி வாக்குறுதிகளை கண்டு ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் 'மெய்தி' என மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், அவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Karnataka Election: Look at the consequences of the double engine sarkar- P Chidambaram Slams BJP

இது தொடர்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வெடித்த இந்த வன்முறை காரணமாக 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவமும் அசாம் ரைஃபிள் படை பிரிவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், இரட்டை என்ஜின் அரசாங்கம் என பாஜக கூறி வரும் போலி வாக்குறுதிகளைக் கண்டு மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karnataka Election: Look at the consequences of the double engine sarkar- P Chidambaram Slams BJP

இது தொடர்பாக ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். இரண்டு என்ஜின்களுமே தோல்வி அடைந்து விட்டன. மாநிலத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் மாநில அரசு உடைந்து விட்டது.

மத்திய அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் பொறுப்பற்ற தீர்வுகளை கையாள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றுமையாக பயணித்த சமூகங்கள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கர்நாடக வாக்காளர்கள் போலியான 'இரட்டை என்ஜின் அரசு' வாக்குறுதி குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Karnataka Election: Look at the consequences of the double engine sarkar- P Chidambaram Slams BJP

மத்தியிலும் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதை குறிக்கும் வகையில் பாஜக இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் என்ற வார்த்தையை பாஜக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய கோஷமாக இரட்டை என்ஜின் அரசாங்கம் வேண்டும் என்றால் அப்போதுதான் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் சிதம்பரம், இரட்டை என்ஜின் என்பதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 113 இடங்களுக்கு மேல் வென்றால்தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+