கிச்சன் எங்கே? சாப்பிட போன ஓட்டலில் சட்டென கேட்ட பிரியங்கா காந்தி! மைசூரில் நடந்த சுவாரசியம்..அடடே
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தியின் சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று மைசூரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அவர் சாப்பிட சென்றார். அப்போது கிச்சன் எங்கே? என திடீரென கேட்டு உள்ளே வேகவேகமாக சென்று அவர் செய்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்தது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 13ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.

இந்நிலையில் தான் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 223 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், நடிகை ரம்யா உள்பட 40 பேர் பெயர்கள் அடங்கிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாய மடாதிபதிகளை ராகுல் காந்தி சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர் பாகல்கோட்டை மற்றும் விஜயாப்புரா மாவட்டங்களில் பேரணி நடத்தி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பழைய மைசூர் பகுதியில் பிரியங்கா காந்தி நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் மைசூரில் புகழ்பெற்ற மயால்ரி ஓட்டலுக்கு பிரியங்கா காந்தி சாப்பிட சென்றார். இந்த ஓட்டலுக்கு சென்ற பிரியங்கா காந்தியை அதன் உரிமையாளர்கள் வரவேற்றனர். பிரியங்கா காந்தி ஓட்டலுக்குள் சென்றார்.
இந்த வேளையில் கிச்சன் எங்கே? என திடீரென கேட்ட பிரியங்கா காந்தி விறுவிறுவென உள்ளே சென்றார். அங்கு அவர் தோசை சுட்டு மகிழ்ந்தார். அதன்பிறகு ஓட்டலில் கர்நாடகா மாநில தலைவர் டிகே சிவக்குமார், கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்பட நிர்வாகிகளுடன் அமர்ந்து பிரியங்கா காந்தி தோசை, இட்லி சாப்பிட்டார். அதன்பிறகு அவர் அங்கு வந்த குழந்தைகளிடம் அன்போடு பெயர் விபரங்களை கேட்டார்.

அதன்பிறகு பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தோசை சுட்ட வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛இன்று காலை பழம்பெருமை வாய்ந்த மயால்ரி ஓட்டலில் தோசை சுட்டு மகிழ்ந்தேன். .நேர்மையான, கடின உழைப்புக்கு இந்த ஓட்டல் சிறந்த உதாரணமாகும். உங்களின் வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி. தோசைகளும் சுவையாக இருந்தன... என் மகளை மைசூருக்கு அழைத்து வந்து சாப்பிட காத்திருக்கிறேன்'' என்றார். இந்த ஓட்டல் 80 ஆண்டு பழமை கொண்டது. இங்கு தோசை, இட்லி மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications