‛‛நெற்றி நிறைய விபூதி’’.. மொத்தமாக ஆளே மாறிய ராகுல்! கர்நாடகா தேர்தலில் கவனம் பெற்ற நிகழ்வு.. அடடே!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ராகுல் காந்தி கர்நாடகா சென்றார். பாஜகவின் ஓட்டு வங்கியாக லிங்காயத் சமுதாயம் உள்ள நிலையில் பாகல்கோட்டையில் நடந்த பசவ ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி நெற்றி நிறைய விபூதி அணிந்து முற்றிலுமாக வித்தியாசமாக காட்சியளித்து கவனம் ஈர்த்தார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. மாறாக கர்நாடகாவில் மட்டும் பாஜக செல்வாக்குடன் திகழ்கிறது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது.

மே மாதம் 24ம் தேதியுடன் கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது வேட்புமனு தாக்கல் மற்றம் பரிசீலனை நிறைவு பெற்றுள்ளது. நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதையடுத்து நாளை மாலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது. இதற்கிடையே ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் முதற்கட்ட பிரசாரத்தை முடித்த ராகுல் காந்தி இன்று 2வது கட்டமாக 2 நாள் பயணமாக கர்நாடகா சென்றார். தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கிய ராகுல் காந்திக்கு கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பாகல்கோட்டை சென்றார். அங்கு லிங்காயத் சமுதாயத்தின் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.
இந்த வேளையில் ராகுல் காந்தி நெற்றி நிறைய திருநீர் பூசி இருந்தார். அதாவது பக்தியை வெளிக்காட்டும் வகையில் அவர் திருநீர் பட்டை அணிந்திருந்து விழா மேடைக்கு நடந்து சென்று அமர்ந்தார். அதன்பிறகு விழா மேடையில் அமர்ந்த ராகுல் காந்தி லிங்காயத் மடாதிபதிகளிடம் பேசினார். மேலும் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு மடாதிபதிகள் சார்பில் பசவண்ணர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ராகுல் காந்தி நெற்றி நிறைய பக்தியுடன் திருநீர் அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் லிங்காயத்துகள் தான் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி இந்த விழாவில் பங்கேற்று நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த முறை லிங்காயத் ஓட்டுகளை கவர காங்கிரஸ் பல்வேறு செயல்களை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் ராகுல் காந்தியும் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்றதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications