பெரிய ஷாக்.. அடுத்து நொறுக்கிய காங்கிரஸ்.. இடிந்துபோன சித்தராமையா.. கண்கலங்கிய சோகம்.. என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில் தான் அவரது காதுக்கு வந்த கெட்ட செய்தியால் கண்கலங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 10ம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 73.17 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதகிமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மேலிட தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக முதல்வர் பதவியை எதிர் நோக்கியுள்ள சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இருவரும் அடுத்த கட்டமாக முதல்வர் பதவியை பெற காய்நகர்த்தி வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் சித்தராமையா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நிலையில் தான் திடீரென்று அவருக்கு ஒரு கெட்ட செய்தி வந்தது. இதனை கேட்ட சித்தராமையா அப்படியே ஒரு நொடியில் கண்கலங்கினார். இந்த கலக்கத்தின் பின்னணி குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது சித்தராமையாவின் உடன்பிறந்த சகோதரியின் பெயர் சிவம்மா. இவரது கணவர் பெயர் ராமகவுடா. இவரது வயது 69. இவர் சித்தராமையாவின் சொந்த ஊரான சித்தராமயனகுந்தியில் ரேஷன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ராமகவுடா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மைசூரில் உள்ள ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தான் தேர்தல் ரிசல்ட் வெளியான இன்று அவரது உயிர் பிரிந்தது. இதுபற்றி சித்தராமையாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்ட சித்தராமையா அதிர்ச்சியடைந்தார். மேலும் ஒரு நொடியில் அவர் சோகமாகி கண்கலங்கினார். சித்தராமையாவின் சகோதரி ராமகவுடா-சிவம்மா தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications