பலிகடா.. சித்தராமையாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்ட பாஜக அமைச்சர் 2 தொகுதிகளிலும் படுதோல்வி
பெங்களூர்: கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சித்தராமையாவை வீழ்த்துவேன் என முஷ்டி முறுக்கி சொந்த தொகுதியை விட்டு வெளியேறி வருணா, சாம்ராஜ்நகரில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் தோல்வியடைந்தார். சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர் புட்டரங்க செட்டி ஆகியோர் சரியாக ஸ்கெட்ச் போட்டு சோமண்ணாவை வீழ்த்தி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013 தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த தேர்தலில் மகன் யதீந்திராவுக்காக தொகுதியை விட்டு கொடுத்தார். இதையடுத்து யதீந்திரா வெற்றி பெற்றார்.

மாறாக கடந்த தேர்தலில் சித்தராமையா தொகுதி மாறி 2 இடங்களில் போட்டியிட்டார். மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.
இந்த தேர்தலில் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வென்றால் முதல்வர் பதவியை பெறும் நோக்கத்தில் அவர் சொந்த தொகுதிக்கு திரும்பினார். தந்தைக்காக மகன் யதீந்திரா தொகுதியை தியாகம் செய்தார். சித்தராமையாவை தோற்கடிக்க பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.
ஆனால் இதற்கு எடியூரப்பா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா வருணாவில் பாஜக சார்பில் போட்டியிட்டார். மேலும் அவருக்கு சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. சோமண்ணா பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலையில் அதனை விட்டுவிட்டு வெளிமாவட்டங்களில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
மேலும் சித்தராமையாவை வீழ்த்துவாக அவர் முஷ்டி முறுக்கி பிரசாரம் செய்தார். இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருணா, சாம்ராஜ் நகர் என 2 தொகுதிகளிலும் சோமண்ணா தோல்வியடைந்துள்ளார். வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். சாம்ராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டி வெற்றி பெற்றுள்ளார். புட்டரங்க செட்டி என்பவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
சோமண்ணா தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் சேரவில்லை. மேலும் பாஜக தலைவர்களுடன் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தான் சோமண்ணாவுக்கு சொந்த தொகுதியை விட்டு வெளிமாவட்டங்களில் 2 தொகுதிகளை பாஜக மேலிடம் வழங்கியது. இதன்மூலம் சோமண்ணா தற்போது பலிகடாவாகி உள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications