ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்! அண்ணாமலையை மாட்டிவிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலை இதுதான்.. பரிதாபம்
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டுக்கட்டாக ஹெலிகாப்டரில் பணம் எடுத்து சென்றதாக பரபரப்பான புகார் அளித்து சிக்கலில் சிக்கவைத்த காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொரகே பரிதாபமாக தோற்றார். அவரை பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களின் விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்நிலையில் தான் கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக செயல்பட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடுப்பி மாவட்டத்துக்கு பிரசாரம் சென்றபோது ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றதாக பரபரப்பான புகார் அளித்த காங்கிரஸ் வேட்பாளரின் நிலை என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது தேர்தல் பிரசாரத்தின்போது அதாவது கடந்த மாதம் 17 ம் தேதி அண்ணாமலை உடுப்பி சென்றார். ஹெலிகாப்டரில் அவர் பயணித்தார். அப்போது அண்ணாமலை வைத்திருந்த பேக்கில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய்குமார் சொரகே தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை முழுவதுமாக மறுத்தார். மேலும் தேர்தல் ஆணையம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அண்ணாமலை கொண்டு சென்ற பேக்குகளில் ஆடைகள் மட்டுமே இருந்தன. பணம் இல்லை. அவரது ஹெலிகாப்டர், பேக்குகள் சோதனை செய்யப்பட்டன என விளக்கம் அளித்தது. இருப்பினும் வினய் குமார் செரகேவின் இந்த புகார் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் அண்ணாமலை மீது பரபரப்பான புகார் கூறிய வினய் குமார் சொரகே காங்கிரஸ் கட்சி சார்பில் உடுப்பி மாவட்டம் காபு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இன்றைய தேர்தல் முடிவில் அவர் தோல்வியடைந்தார். காபு தொகுதியில் வினய் குமார் சொரகே 67,555 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து பாஜகவில் போட்டியிட்ட குர்மி சுரேஷ் செட்டி 80,559 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வினய் குமார் சொரகே தோல்வியடைந்தார்.
முன்னதாக தபால் ஓட்டு எண்ணிக்கையில் இருந்தே வினய் குமார் சொரகே பின்தங்கி இரந்தார். இறுதியில் அவர் தோல்வியையும் தழுவினார். உடுப்பி என்பது கர்நாடகாவில் கடலோர மாவட்டமாகும். இங்கு பாஜக செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இந்நிலையில் தான் வினய் குமார் சொரகே தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications