பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜான்சன் மர்ம மரணம்! 4-வது மாடியில் இருந்து விழுந்தது எப்படி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜூட் ஜான்சன் (வயது 52). பெங்களூர் கொத்தனூர் கனகஶ்ரீ லே அவுட் எஸ்எல்வி பாரடைஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஜான்சன் வசித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் 1996-ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார் ஜான்சன். 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் ஜான்சன். மொத்தம் 39 முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 125 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை முற்பகலில் ஜான்சன் தமது அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார் ஜான்சன். மருத்துவமனைக்கு ஜான்சன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது மாடியின் பால்கனியில் இருந்து ஜான்சன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 4-வது மாடியில் இருந்து தவறிதான் கீழே விழுந்து ஜான்சன் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்காக 4-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜான்சன் மரணத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications