சித்தராமையா அமைச்சரவையில் மல்லிகார்ஜூன கார்கே மகன்..லிஸ்ட்டில் இடம் பெற்ற 8 பேர் யார் யார்?
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று புதிய முதல்வராக சித்தராமையாயும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்கின்றனர். அதோடு
8 பேர் இன்று முதற்கட்டமாக அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ள பட்டியல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்றபோதும் முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுக்கு பிறகு 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைதொடர்ந்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். அழைப்பு கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார். அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சித்தராமையாவுடன் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டிகே சிவக்குமாருடன் 8 பேர் இன்று முதற்கட்டமாக அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொள்கின்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications