பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது? கர்நாடகா அதிகாரிகளை விழிபிதுங்க வைக்கும் புதிய சிக்கல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் 10 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது என்பது தெரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தொற்று மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது. பொதுவாக கொரோனா தொற்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் பரவி வருகிறது.

Karnataka govt worried over Mystery Coronavirus cases

இந்தியாவில் சமூகப் பரவல் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கர்நாடகாவில் குறைந்தது 10 பேருக்கு கொரோனா தொற்று நோய் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளதாம்.

 கொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து கொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து

அவர்கள் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை; வெளிநாடுகளுக்கு சென்றவர்களுடனும் தொடர்பில் இருந்தது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடனும் எந்த தொடர்பும் அவர்கள் வைத்திருக்கவும் இல்லை. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த நபர்களுடனும் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இப்படியான நிலையில் 10 பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்பது விடை தெரியாத கேள்வியாம்.

பெங்களூரு, கடக், மைசூரு, பாகல்கோட், பெங்களூரு புறநகர், பெல்லாரி ஆகிய பகுதிகளில் இப்படியான விடைதெரியாத வினாக்களோடு சில நோயாளிகள் இருக்கின்றனர். தற்போது இவர்களுக்கு கொரோனா எப்படி வந்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் மருத்துவர்களின் முதன்மையான பணியாக இருக்கிறதாம்.

English summary
Karnataka govt now worried over the Mystery Coronavirus cases in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X