132 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. அனைத்து கட்சி கூட்டத்துக்கு முன்பே 'துரோக' முடிவை அறிவித்த கர்நாடகா!
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரம் குறித்து கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்னரே கர்நாடகா வறட்சியில் சிக்கியிருப்பதாக துணை முதல்வர் டிகே சிவகுமார் பஞ்சபாட்டு பாடினார்.
தமிழ்நாடு அரசு, காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட கோருகிறது. ஆனால் கர்நாடகாவோ, குடிக்கவே நீர் இல்லை; குறுவை சாகுபடிக்கு எங்கே நீரை திறந்துவிடுவது என்கிறது?.

காவிரி நீர்: காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் இறுதியில் கூடியது. அந்தக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு இதே கோரிக்கையை முன்வைத்தது. வழக்கம் போல கர்நாடகா அரசு தரப்பில் "பஞ்சபாட்டு' பாடப்பட்டது. ஒருவழியாக வெறும் 5,000 கன அடிநீரை மட்டும் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த சொற்ப நீரைகூட கர்நாடகா முழுமையாக திறந்துவிடவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்துக்குப் போயுள்ளது தமிழ்நாடு. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ல் நடைபெறுகிறது. இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழுவாது, தமிழ்நாட்டுக்கு மேலும் வினாடிக்கு 5,000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது. அவ்வளவுதான் தாமதம்!
அனைத்து கட்சிக் கூட்டம்: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கூடாது என கர்நாடகாவில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க, கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியுனார். காவிரி பிரச்சனைக்காக கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டி இருந்தார். தற்போது காவிரி பிரச்சனையில் 2-வது அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
டிகே சிவகுமார் பேட்டி: இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் 132 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதுவரை 98 டிஎம்சி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது வெறும் 37 டிஎம்சி நீர்தான் உள்ளது. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்னர் ஏற்பட்டது இல்லை. கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வறட்சி நிலவுகிறது என்றார். அதாவது தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர முடியாது என்பதுதான் கர்நாடகா அனைத்து கட்சிக் கூட்டத்தின் முடிவாக இருக்கும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் டிகே சிவகுமார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications