புர்கா அணியாத பள்ளி மாணவியை அரசு பஸ்சிலிருந்து இறக்கி விட்ட டிரைவர்.. பாய்ந்தது வழக்கு
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஹிஜாப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் புர்கா அணியாத பள்ளி மாணவியை அரசு பஸ்சில் இருந்து டிரைவர் இறக்கிவிட்ட டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சில மாணவர்கள் காவி ஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது பெரிய பிரச்சனையாக வெடித்தது.

கர்நாடகாவின் பல இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர். இந்திய அளவில் இந்த போராட்டம் பெரும் பிரச்சனையாக உருவானது. கர்நாடகா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பிரச்சனை என்பது இல்லாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது புர்கா அணியாத மாணவியை அரசு பஸ்சில் இருந்து இறக்கவிட்ட சம்பவம் பெரும் அசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகாவில் கேஎஸ்ஆர்டிசி, பெங்களூரில் பிஎம்டிசி பஸ்கள் இயங்கி வருகின்றன. அதேபோல் வடகர்நாடகா மாநில பகுதியை மையப்படுத்தி கேகேஆர்டிசி எனும் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த போக்குவரத்து கழகத்தின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பீதர் மாவட்டம் பசவகல்யாண் பகுதியில் இருந்து கலபுரகிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் கலபுரகி மாவட்டம் கமலாபுரா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பள்ளியை முடித்துவிட்டு சில மாணவிகள் பஸ்சில் ஏறினர். அப்போது முஸ்லிம் மாணவியும் பஸ்சில் ஏறினார். அவர் புர்கா அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த டிரைவர் அவரை புர்கா அணியும்படி வலியுறுத்தினர். மேலும் புர்கா அணிந்தால் மட்டுமே பஸ்சில் பயணிக்க முடியும். இல்லாவிட்டால் பஸ்சில் இருந்து இறக்கிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மாணவி செய்வறியாது அப்படியே நின்றார். இதை பஸ்சில் பயணித்த ஆசிரியர் பார்த்தார். அவர் மாணவிக்கு ஆதரவாக பேசினார். அதாவது டிரைவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த டிரைவர் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்து மாணவியை பஸ்சில் இருந்து இறக்கவிட முயன்றதாக கூறப்படுகிறது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பவம் குறித்து அந்த ஆசிரியர் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். இதையடுத்து தலைமையாசிரியர் கமலாபுரா போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications