கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. வேலை முடிந்து வந்த கணவர் பார்த்ததும் செய்த செயல் - நடுங்கிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் அருகே இரவு பணிக்கு கணவர் சென்றதும் பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் படுக்கையில் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென பணியை முடித்து நடு இரவில் வீட்டுக்கு திரும்பிய கணவர் இன்னொரு நபருடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மனைவியின் தலையை வெட்டி கொன்றார்.
பெங்களூர் புறநகர் மாவட்டம் சூர்யாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹென்னகரா பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 28). இவரது மனைவி பெயர் மானசா. இவருக்கு 26 வயது ஆகிறது. இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

சங்கர் - மானசா தம்பதி திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 3ம் தேதி இரவு சங்கர் தனது மனைவி மானசாவிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலையில் தான் வேலையை முடித்து வருவேன். இதனால் கதவை திறந்து வைக்க வேண்டாம். பூட்டிவைத்து தூங்கும்படி கூறிவிட்டு சென்றார். ஆனால் சங்கரின் பணி சீக்கிரமாக முடிவடைந்துவிட்டது. இதனால் அவர் நள்ளிரவிலேயே வீடு திரும்பினார்.
அப்போது அவர் வீட்டில் கண்ட காட்சியால் பெரும் அதிர்ச்சியடைந்தார். அவது மனைவி மானசா இன்னொரு ஆணுடன் உடலுறவு வைத்திருந்தார். கட்டிலில் இருவரும் சேர்ந்து இருந்தனர். இதனை கண்டு கடும் கோபமான சங்கர் அந்த நபரை பிடித்து தாக்கினார். ஆனால் சங்கரிடம் இருந்து அந்த நபர் தப்பியோடினார். இதனால் ஆத்திரம் அடங்காத சங்கர் தனது மனைவி மானசாவை தாக்கினார்.
மேலும் அவர் அரிவாளை எடுத்து மானசாவை வெட்டினார். அவரது தலையை துண்டாக்கினார். அதன்பிறகு அந்த தலையை கையில் வைத்து கொண்டு அருகே உள்ள சூர்யாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்து சரணடைந்தார். போலீசார் சங்கரை கைது செய்தனர். மானசாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications