3000 ஆபாச வீடியோக்கள்.. ஜேடிஎஸ்ஸில் பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்.. சித்தப்பா குமாரசாமி அறிவிப்பு
பெங்களூர்: பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான சுமார் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது சித்தப்பாவும், கட்சியின் தலைவருமான எச்டி குமாரசாமி அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பெயர் பிரஜ்வல். ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார். இந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் அவர் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஹாசன் தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்தது. முன்னதாக தேர்தலுக்கு முந்தைய நாளே பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. அதாவது உதவி கோரி வந்தவர்களை ஆசைக்கு இணங்க வைத்து ‛செக்ஸ்' டார்ச்சர் கொடுத்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 300க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக அவர் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோக்களை அவர் பென்டிரைவ்வில் சேமித்து வைத்த நிலையில் தற்போது வெளியாகி பரவி வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து கர்நாடகா அரசு சார்பில் எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்று விட்டார். இதற்கிடையே தான் பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் பூதாகரமாகி உள்ளது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஜேடிஎஸ் எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்க தொடங்கினர்.
இந்நிலையில் தான் இன்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஜேடிஎஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான குமாரசாமியின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது எஸ்ஐடி விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கி சித்தப்பா குமாரசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications