கர்நாடகாவில் ஷாக்! நந்தினி பால், தயிர் விலை கிடுகிடு உயர்வு! இன்று முதல் எவ்வளவு? இதோ முழு லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நந்தினி நிறுவனத்தின் பால், தயிர், பட்டர் மில்க் உள்ளிட்டவற்றின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போல் கர்நாடகாவில் நந்தினி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகா பால் கூட்டமைப்பு சார்பில் ‛நந்தினி' என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகா அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
நந்தினி நிறுவனம் சார்பில் பால், தயிர், நெய், பட்டர், ஐஸ் கிரீம், சாக்லேட்டுகள், இனிப்புகள் உள்ளிட்டவை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிறுவனம் என்பதால் மாநிலம் முழுவதும் ‛நந்தினி' தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் சமீபகாலமாக நந்தினி பால் உள்பட அதன் பிற பொருட்களின் விலைகள் உயரும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து முந்தைய பாஜக அரசு விலை ஏற்றத்தை தள்ளிவைத்தது. இருப்பினும் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நந்தினி பால் விலையை அதிகரிக்க முடிவு செய்தது. அதன்படி நந்தினி பால், நந்தினி தயிர் பாக்கெட்டுகளின் விலை ரூ.3 வரை உயர்த்தவும், பட்டர்மில்க்கின் விலை ரூ. 1 வரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது இன்று முதல் கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வின் விபரம் வருமாறு:
இந்த விலை உயர்வு அனைத்து வகை பால் பாக்கெட்டுகளிலும் எதிரொலிக்கிறது. அதன்படி ஒரு லிட்டர் Toned Milk (நீலநிற பாக்கெட்) ரூ.39ல் இருந்து ரூ.42க்கும், Homogenised Toned Milk ரூ.40ல் இருந்து ரூ.43க்கும், பசும்பால் (பச்சை பாக்கெட்) ரூ.43ல் இருந்து ரூ.46க்கும், சுபம் ஸ்பெஷல் மில்க் (ஆரஞ்ச் பாக்கெட்) ரூ.45ல் இருந்து ரூ48க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர அரைலிட்டர் சாதாரண பால் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.20க்கு விற்பனையான சாதாரண பால் இன்று முதல் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் தயிர் ஒரு கிலோ ரூ.47 ல் இருந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் பட்டர் மில்க் (200 மில்லி லிட்டர் பாக்கெட்) ரூ.8 ல் இருந்து ரூ.9 ஆக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசின் நந்தினி பால் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஷாக்காகி உள்ளனர். இந்த பால் பாக்கெட்டுகள் கர்நாடகா மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த விலை உயர்வு அண்டை மாநில மக்களையும் பாதித்துள்ளது என்பது குறுிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications