பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவிற்கு சர்ப்ரைஸ்.. யாரும் எதிர்பார்க்காதவர் முதல்வராக போகிறார்.. எடியூரப்பா மகன் பளிச்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக புதிய முதல்வர் தேர்வு யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என்று எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    மேலிட பார்வையாளர்களாக தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு! பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு!

    .

    இன்று இரவு அல்லது நாளை புதிய முதல்வர் தேர்வு

    இன்று இரவு அல்லது நாளை புதிய முதல்வர் தேர்வு

    அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி இதில் விவாதிக்கப்பட்டு அந்த முடிவு டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று இரவு அல்லது நாளை காலை புதிய முதல்வர் யார் என்பது பற்றி டெல்லி பாஜக தலைமை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. நாளை மதியத்துக்கு முன்பாக முதல்வர் பெயர் வெளியிடப்பட்டால் நாளை மாலைக்குள் புதிய முதல்வர் ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

    சீனியர் அமைச்சர்

    சீனியர் அமைச்சர்

    அமைச்சரவை ஒரு வாரத்திற்குள் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் ஒருவர்.. அதிலும் இப்போது சீனியர் அமைச்சர்களாக இருப்பவர்களில் ஒருவர் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சிலர் கூறுகிறார்கள். சிலரோ கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளம் தலைவர் முதல்வராகப்படுவார் என்று ஆருடம் தெரிவிக்கிறார்கள்.

     எடியூரப்பா மகன்

    எடியூரப்பா மகன்

    இந்த நிலையில்தான் ஷிமோகா லோக் சபா எம்பி மற்றும் எடியூரப்பாவின் மகனான, ராகவேந்திரா இன்று அளித்துள்ள பேட்டியில், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எப்படி சர்ப்ரைஸாக யாரும் எதிர்பார்க்காத ஒருவரை முதல்வராக்கியதோ, அதுபோல கர்நாடகாவிலும் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார். எனவே புதிய முதல்வர் யார் என்பது பற்றி தீவிர எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    கர்நாடக ஆட்சி நீடிக்குமா

    கர்நாடக ஆட்சி நீடிக்குமா

    எடியூரப்பா போன்ற மிகப்பெரிய மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவர் முதல்வராக இருந்தபோதே, அவருக்கு எதிராக பாஜக மேலிடத்துக்கு புகார் சொல்வது.. உள்ளுக்குள்ளே கலகம் செய்வது என கலக வேலைகளில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இப்போது புதிதாக ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்போது, சீனியர் அமைச்சர்கள் மற்றும் புதிய முதல்வருக்கு வேண்டாதவர்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள்.. ஆட்சி நிலைக்குமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    English summary
    Day after BS Yediyurappa's resignation as chief minister of Karnataka, the ruling BJP convey a meeting of legislature party at a private hotel in Bangalore on today. Meanwhile BS Yediyurappa's son Raghavendra told reporters that, the next chief minister of Karnataka will be a surprise choice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X