'அட்ஜஸ்' செய்டா..அரசியலில் ஓஹோடா..பிரஜ்வல் சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீது போலீஸ் ஓரினச் சேர்க்கை வழக்கு!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன்களில் ஒருவரும் கர்நாடகா மேல்சபை உறுப்பினருமான சூரஜ் ரேவண்ணா மீது போலீசார் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமது விருப்பத்துக்கு ஏற்ப ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அரசியலில் மேலே கொண்டு வருவேன் என கூறியே ஜேடிஎஸ் தொண்டர் ஒருவரை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட சூரஜ் ரேவண்ணா கட்டாயப்படுத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன்)வின் மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா. பிரஜ்வல் ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர். தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பிரஜ்வல் ரேவண்ணா தற்போது ஆபாச வீடியோ வழக்குகளில் சிறையில் உள்ளார். பல நூறு பெண்களை பலாத்காரம் செய்து 3,000 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்திருந்தார் பிரஜ்வல் ரேவண்ணா என்பது வழக்கு. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் நாடு திரும்பிய பிரஜ்வல் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.

இந்த நிலையில் ரேவண்ணாவின் மற்றொரு மகன்களில் ஒருவரான சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கை புகார் கூறப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேடிஎஸ் தொண்டர் ஒருவர்தான் சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்திருந்தார். ஆனால் சூரஜ் ரேவண்ணா தரப்போ, பணம் கேட்டு மிரட்டியதாகவும் அப்படி பணம் தராவிட்டால் ஓரினச் சேர்க்கை புகார் தருவேன் எனவும் சேத்தன் என்ற ஜேடிஎஸ் தொண்டர் கூறியதாக இன்னொரு புகாரை போலீசில் கொடுத்தது. போலீசாரும் சேத்தன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தது.
suraj revanna, prajwal revanna, சூரஜ் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணாதற்போது சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில் கடந்த ஜூன் 16-ந் தேதி ஜேடிஎஸ் தொண்டரை தமது பண்ணை வீட்டுக்கு வரவழைத்த சூரஜ் ரேவண்ணா அவரது விருப்பமே இல்லாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து.. தகாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் தமது விருப்பத்துக்கு ஏற்ப ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அரசியலில் பெரிய ஆளாக்கி காட்டுவேன் எனவும் ஆசை வார்த்தை காட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜேடிஎஸ் தொண்டரை அச்சுறுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்திருக்கிறார் சூரஜ் ரேவண்ணா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூரஜ் ரேவண்ணாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications