Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையா வேண்டாம்.. முதல்வராகும் சிவக்குமார்? டெல்லியில் நடக்கும் மூவ்! திடீர் அரசியல் பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருக்கும் சூழலில் அவரை நீக்கிவிட்டு அங்கு டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் முதல்வரை மாற்ற வேண்டும் என சொல்ல டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், இன்னொரு பக்கம் சித்தராமையா இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரசியலில் இப்போது பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. சித்தராமையா முதல்வர் பதவிக்கு வந்து 2.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

DK Shivakumar Siddaramaiah Congress

கர்நாடக அரசியல்

சிவக்குமார் ஆதரவாளர்கள் இதற்காக டெல்லிக்கே சென்றுள்ளனர். அங்குத் தேசிய தலைமையைச் சந்தித்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். இருப்பினும், டெல்லி காங்கிரஸ் தலைமை அதை ஏற்கும் மனநிலையில் இல்லையாம். சித்தராமையாவே முதல்வராகத் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கிறது.

சித்தராமையாவும் கூட தனது முதல்வர் பதவியை விட்டுத் தருவது போலத் தெரியவில்லை. நானே முதல்வர் பதவியில் தொடர்வேன் என்றும் நானே பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். முதல்வர் மாற்றம் குறித்து திரும்பத் திரும்ப தேவையில்லாமல் கேட்க வேண்டாம் என்றும் அவர் கடிந்து கொண்டர். மேலும், டெல்லி தலைமை முதல்வரை மாற்றப் போவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும் இது தொடர்பான அதிகாரம் டெல்லி தலைமைக்கே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

டெல்லியில் நடக்கும் மூவ்

அதேநேரம் ஒரு அமைச்சர் உட்பட சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை டெல்லி சென்றனர். இன்னும் சில கூடுதல் எம்எல்ஏக்கள் இன்று அல்லது நாளை டெல்லி செல்வார்கள் எனத் தெரிகிறது. அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலை சந்தித்து முதல்வர் மாற்றம் குறித்து வலியுறுத்த இருக்கிறார்கள்.

மறுபுறம் தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவரான கார்கே பெங்களூர் வந்துள்ளார். இன்றிரவு அவர் பெங்களூரிலேயே தங்கி முக்கிய தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், முதலமைச்சர் சித்தராமையா திடீரென தனது மைசூர் மற்றும் சாமராஜநகர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு திரும்பி வருகிறார். இன்றிரவு சித்தராமையா- கார்கே சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நான் தான் முதல்வர்

முன்னதாக நேற்று வியாழக்கிழமை சாமராஜநகரில் சித்தராமையாவிடம் ஐந்து ஆண்டுகளுக்கும் நீங்கள் முதல்வராகத் தொடர்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது தேவையற்ற வாதம் என மட்டும் பதிலளித்தார். அவர் மேலும், "காங்கிரஸ் ஆட்சி அமைத்து 2.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சரவை மாற்ற அமைக்கப்படும் சிலர் கிளப்பிவிட்டனர். அதன் பிறகே முதலமைச்சர் மாற்றம் குறித்த விவாதம் ஆரம்பித்தது. அமைச்சரவை மாற்றம் குறித்த முடிவையும் டெல்லி தலைமையே எடுக்கும். நாம் பேசுவது தேவையில்லாத ஒன்று.

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

மேலும், கர்நாடகாவில் அதிகபட்சம் 34 அமைச்சர் பதவிகள் உள்ளன. அதில் இப்போது இரண்டு காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் அமைச்சரவை மாற்றத்தின் போது நிரப்பப்படும்" என்று அவர் கூறினார். அதாவது அமைச்சரவை மாற்றம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும் முதல்வர் பதவியில் மாற்றம் இருக்காது என்றே அவர் சொல்லியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+