Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தவர் மனைவிக்கு காதல் கடிதம் எழுதாதீங்க.. காங்கிரசை விளாசிய குமாரசாமி கட்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக ராஜ்யசபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த போது, ‛அடுத்தவரின் மனைவிக்கு காதல் கடிதம் எழுதாதீங்க' என மதசார்பற்ற ஜனதாதளம்(ஜேடிஎஸ்) கட்சியின் மாநில தலைவர் சிஎம் இப்ராஹிம், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவை(காங்கிரஸ்) விமர்சித்தார்.

கர்நாடகத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு இன்று ராஜ்யசபா தேர்தல் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு மாலை 5 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தை பொறுத்தமட்டில் பாஜகவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டிடுகின்றனர்.

4 இடத்துக்கு ஐவர் போட்டி

4 இடத்துக்கு ஐவர் போட்டி

மொத்தம் 4 இடங்கள் காலியாக உள்ள நிலையில் 5 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அதன்படி எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் அடிப்படையில் பாஜகவின் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் வெற்றி உறுதியாகிவிட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலா ஒரு வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

 மாற்றுகட்சி ஆதரவு பெற முயற்சி

மாற்றுகட்சி ஆதரவு பெற முயற்சி

4 நபரை தேர்வு செய்ய எந்த கட்சிக்கும் போதுமான அளவில் எம்எல்ஏக்களின் பலம் இல்லை. பாஜகவின் 3வது வேட்பாளரான லெகர்சிங்கிற்கு அக்கட்சியின் 32 எம்எல்ஏக்கள், காங்கிரஸின் 2வது வேட்பாளரான மன்சூர் அலிகானுக்கு அக்கட்சியின் 25 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முதல் வேட்பாளரான குபேந்திர ரெட்டிக்கு 32 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. இதனால் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சிகள் மேற்கொண்டனர்.

 கட்சி மாற்றி ஓட்டு

கட்சி மாற்றி ஓட்டு

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பெங்களூரில் உள்ள விதானசவுதாவில் நடந்தது. அப்போது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்கள் சிலருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாக கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று தேர்தல் நடந்தபோது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏ சீனிவாசகவுடா காங்கிரசுக்கு ஓட்டளித்ததாக தெரிவித்தார். இதனை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் முதல்வரான குமாரசாமி கடுமையாக கண்டித்தார்.

ஜேடிஎஸ் கடும் விமர்சனம்

ஜேடிஎஸ் கடும் விமர்சனம்

இந்நிலையில் தான் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவரான சிஎம் இப்ராஹிம் காங்கிரஸ் கட்சியையும், சித்தராமையாவையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதுபற்றி சிஎம் இப்ராஹிம் கூறியதாவது: எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரி எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள இன்னொருவரின் மனைவிக்கு காதல் கடிதம் எழுதுவது தவறானது இல்லையா?. இது குற்றமாகும். கர்நாடகத்தில் இருந்து பாஜகவினரை ஓரம்கட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளருக்கு ஓட்டு செலுத்திய பிறகு மற்றவர்களை மதசார்பற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. எம்எல்ஏ சீனிவாச கவுடா எங்களுக்கே ஓட்டுப்போட்டதாக தெரிவித்தார். ஆனால் அவர் எங்களுக்கு ஓட்டு செலுத்தினாரா? காங்கிரசுக்கு செலுத்தினாரா? என்பது கடவுளுக்கு தான் தெரியும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+