கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. பாஜகவுக்கு “ஆபத்து”? இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 72.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 2018ல் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதிக சீட்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வாக்குப்பதிவு நிறைவு : கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர். 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மெதுவாக தொடங்கி விறுவிறு: காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல் 1 மணிவரை 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல் 3 மணி வரையில் 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி வரை 65.69% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் இரவு 11 மணி நிலவரப்படி 72.67% வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதியான புள்ளி விவரம் நாளை காலை தெரியவரும் என்றாலும், இந்த வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாதது எனத் தெரியவந்துள்ளது.
அதிகபட்ச வாக்குப்பதிவு : 2018 சட்டமன்றத் தேர்தலில் 72.36% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் முந்தைய சாதனையை தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு முறியடித்துள்ளது. முன்னதாக 2013 சட்டமன்றத் தேர்தலில் 71.45 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.
மாண்டியாவில் உள்ள மேலுகோட் சட்டமன்றத் தொகுதியில் 90.93% வாக்குகள் பதிவான நிலையில், பெங்களூருவில் உள்ள சிவி ராமன் நகர் தொகுதியில் 47.43% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் முறையே 62 சதவீதம் மற்றும் 57 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சிக்கு சிக்கல்? : 2018ல் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றபோது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக 104 சீட்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 89 சீட்கள், ஜேடிஎஸ் கட்சி 37 சீட்களைக் கைப்பற்றியது. இப்போது அதைவிட அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறப்பட்டிருப்பதால், அதிக வாக்குப்பதிவு சதவீதம் லாஜிக் இந்த முறையும் வொர்க் அவுட் ஆகுமா என்பதை மே 13ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications