45 வயது பெண்ணை கெஞ்சியும் விடாமல் பலாத்காரம் செய்த ஜேடிஎஸ் மாஜி எம்பி பிரஜ்வல்-பரபர குற்றப்பத்திரிகை
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கில் 1632 பக்க 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் 45 வயது பெண்ணை கெஞ்சியும் கதறியும் விடாமல் பலாத்காரம் செய்து அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தார் பிரஜ்வல் ரேவண்ணா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. கர்நாடகா மாநில சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், ஜேடிஎஸ் கட்சியின் லோக்சபா எம்பியாக இருந்தார். 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் ரேவண்ணா போட்டியிட்ட போதுதான் அவர் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி தலைமறைவானார் பிரஜ்வல். இந்த ஆபாச வீடியோக்கள் குறித்து கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. பிரஜ்வல் ரேவண்ணாவை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பெங்களூர் திரும்பினார். பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்ட பிரஜ்வல், சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீதான 4 பலாத்கார வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டும் தற்போது 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1632 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பிரஜ்வல் ரேவண்ணா தமது தோட்டத்து வீட்டில் பணி செய்து வந்த 45 வயது பெண்ணை எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் விடாமல் பலாத்காரம் செய்தததாகவும் அந்த பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்ததாகவும் இந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட 45 வயது பெண், சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் நீதிபதி முன்னர் நடந்த விவரங்களை வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார் எனவும் அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான எஞ்சிய 3 வழக்குகளிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications