பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் 3 பெண்கள் புகார் அளிக்க 'ரெடி'.. அம்மா பவானியையும் விசாரிக்கிறது சிஐடி!
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கி எடுத்த 300 பெண்களை நாசமாக்கிய எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் 3 பெண்கள் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவின் இந்த நாசகார செயல் தொடர்பாக தாயார் பவானி ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவின் ஹாச தொகுதி சிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். வீட்டில் பணிபுரிந்த பெண்கள், வேலை கேட்டு வந்தவர்கள், உதவி கேட்டு வந்தவர்கள் என பல பெண்களை துப்பாக்கி முனையிலும் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார் பிரஜ்வல் ரேவண்ணா. அத்துடன் அவர்களை ஆபாசமாகவும் வீடியோக்கள் எடுத்திருந்தார். இந்த 3,000 வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவையே அதிரவைத்திருக்கின்றன.

இந்த நிலையில் பிரஜ்வலை தப்ப வைக்க, புகார் கொடுத்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக தந்தை ரேவண்ணாவை போலீசார் கைது செய்துவிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலில் இருக்கும் ரேவண்ணா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் அம்மா- முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவையும் விசாரணைக்கு அழைக்க இருக்கிறதாம் சிறப்பு புலனாய்வுக் குழு. இதனால் தேவ கவுடா குடும்பமே அதிர்ந்து உறைந்து போயிருக்கிறதாம்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளனராம். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் பிரஜ்வல், இந்தியா வருவதாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நாடு திரும்புவார்; மங்களூர் அல்லது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யலாம் என சிஐடி போலீசார் காத்திருந்து ஏமாந்து போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications