கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் நீக்கம்.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை!
பெங்களூர்: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாக ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
சிறையிலிருந்து சசிகலா விடுதலையாவதற்கு முன்னர் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கொரோனா பாதிப்பால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சிறையிலிருந்து விடுதலையானார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு கொரோனா தொற்று நீங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவர் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பெங்களூர் புறநகர் பகுதியில் தேவனஹள்ளி பகுதியில் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சசிகலாவை பார்க்க கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், அமமுக செயலாளர் சம்பத்துடன் திங்கள்கிழமை அன்று பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவை சந்திக்க அனுமதி இல்லாததை அடுத்து அவர்கள் இருவரும் அங்கு சிறிதுநேரம் இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டனர்.
இதன் மூலம் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் யுவராஜை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகிறார்.
கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications