கர்நாடகாவில் பாஜக முதல்வர், நிர்வாகம் அவ்வளவு படுமோசம்-ஷாக் கொடுத்த ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சி நிர்வாகமும் முதல்வரின் செயல்பாடுகளும் மிக மிக மோசம் என ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இம்முறை விட்டுவிடுவதாக இல்லை என களமிறங்கி அடிக்கிறது. எப்படியும் தொங்கு சட்டசபை உருவாகும்; ஏதோ ஒரு கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துவிடலாம் என கனவு காணுகிறது ஜேடிஎஸ்.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது அம்மாநிலத்தில் பிரசாரம் சூடு பறக்கிறது. கோடை வெயிலைவிட கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் அதிரடி பிரசாரம் உச்சகட்டமாக இருந்து வருகிறது.

அதேநேரத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை இழக்கும்; காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதாகவே தெரிவித்துள்ளன. ஒருசில கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் என்கின்றன.
தற்போது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதிலும் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களையும் பாஜக 74 முதல் 85 இடங்களையும் பெறும் என்கிறது இக்கணிப்பு. ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 35 இடங்கள் கிடைக்குமாம்.
இதே ஏபிபி சி வோட்டர், பாஜகவில் ஆளும் முதல்வரின் நிர்வாகம், ஆட்சி குறித்து வெளியிட்ட முடிவுகள்:
கர்நாடகா அரசின் செயல்பாடுகள் எப்படி?
படுமோசம்- 52%
சராசரிதான்- 19%
நன்றாக உள்ளது- 29%
கர்நாடகா முதல்வரின் செயல்பாடுகள் எப்படி?
படுமோசம்- 51%
நன்றாக உள்ளது- 24%
சராசரிதான்.. 25%
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications