Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Wife sells her own husband to his girl

    பெங்களூரு: "இல்லீங்க.. இது கட்டுப்படி ஆகாது.. பார்த்து குடுங்க" என்று பெண் கேட்க, "சரி... இதை முதல்ல வாங்கிக்குங்க" என்று சொல்லி பணத்தை கையில் திணித்தார் மற்றொரு பெண்! இருவரும் விற்றதும், வாங்கி கொண்டதும் அந்த பெண்ணின் புருஷனைதான்!

    கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். கல்யாணம் ஆனதில் இருந்தே இந்த கணவனுக்கு ஏதோ பிரச்சனை போலும்.

    எப்ப பார்த்தாலும் ஒரு சோகத்துடனேயே இருந்தார்..மனைவி என்ன பிரச்சனை, எதுவானாலும் சொல்லுங்க என்று கேட்டபோதும், எதையுமே கணவன் சொல்லவே இல்லை. ஆபீசுக்கு போகும்போது சந்தோஷமா கிளம்பி போறார்.. திரும்பி வரும்போதும் கூடமுகம் மலர்ச்சியாகத்தான் இருக்கிறது.

    புதிர்

    புதிர்

    ஆனால் வீட்டுக்குள் காலை வைத்ததும் முகம் வாடிப்போய், சோகமாகிவிடுகிறது. இதை பலநாள் மனைவியும் கவனித்து குழம்பி போய்விட்டார். சில சமயம் கணவன் வீட்டுக்கு வராமலும் போய்விடுவார். அதனால் இந்த புதிருக்கு விடையே கிடைக்காமல் இருந்தார் மனைவி.

    காதலி

    காதலி

    கடைசியில் காரணத்தை கண்டுபிடித்தார்... கணவனுக்கு ஒரு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று... இதை கேட்டு மனைவி கொதித்து போய் விட்டார்.. ஆத்திரம் அடைந்தார்.. அதனால் சம்பந்தப்பட்ட பெண்ணைதேடி கண்டுபிடித்து, இனிமேல் என் புருஷனுடன் பழகக்கூடாது என்று சொல்லி உள்ளார். ஆனால் அந்த கள்ளக்காதலியோ கேட்கவே இல்லை.. பலமுறை கணவனிடம் இதை பற்றி கெஞ்சியும், அழுதும் அவரும் கேட்கவில்லை.

    முறிவு

    முறிவு

    கடைசியாக அந்த பெண்ணை சந்தித்து உறவை முறித்து கொள்ளுமாறு சொல்லலாம் என்று மனைவி கிளம்பி சென்றார். அந்த பெண்ணுடன் வாதம் செய்தார்.. அப்போதுதான் மனைவிக்கு கடன் பிரச்சனை ஏதோ உள்ளது என்று காதலிக்கு தெரிந்தது. உடனே அந்த விஷயத்தை பிடித்து கொண்டார். உனக்கு என்ன வேணும் கேள்.. பணம் தருகிறேன்.. அதை வாங்கிக்கோ.. உன் புருஷனைஎனக்கு விட்டுத்தந்துடு" என்று கேட்டுள்ளார்.

    டீல் பேசினர்

    டீல் பேசினர்

    இதற்கு மனைவி சம்மதிக்கவில்லை என்றாலும், பணம் என்றதும் வாயடைத்து போனார் ஒரு கட்டத்தில் பேரம் பேசவே ஆரம்பித்துவிட்டார். எப்படியும் புருஷன் இந்த பெண்ணை விட்டு வரப்போவதில்லை என்பதை உணர்ந்த மனைவி, ரூ.17 லட்சம் வரை பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண், அவ்வளவு முடியாதே.. கொஞ்சம் குறைச்சி சொல்லுங்க" என்று பேசி.. கடைசியில் 5 லட்சத்துக்கு இறங்கி வந்துள்ளனர்.

    சத்தியம்

    சத்தியம்

    இறுதியில் 5 லட்சம் வாங்கி கொண்ட மனைவி, இனிமேல், கணவரை தேடி வர மாட்டேன், தொந்தரவு செய்ய மாட்டேன்.. என்று சத்தியம் செய்துவிட்டு, தாலியையும் கழட்டி தந்துவிட்டு.. 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார். இந்த சம்பவம் மாண்டியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+