தாலி கட்டிய புது மனைவி மஞ்சுளாவை காணோமாமே.. தவித்து போன மாப்பிள்ளை.. திடீர்னு தலையில் விழுந்த "இடி"
பெங்களூர்: புதுமாப்பிள்ளை சேகர், மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ துவங்கினார்.. அப்போதுதான் அவரது தலையில் இடி வந்து டமார் என விழுந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்ட பெண்ணை, ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து இடைத்தரகர் மோசடி செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் முதோல் நகரில் வசித்து வருபவர் சோமசேகர்.. இவருக்கு 38 வயதாகியும் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை.. தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக பெண் தேடியும், எங்குமே வரன் அமையவில்லை.
4 லட்சம் கமிஷன்: பல ஆண்டுகளாக வரன்தேடியும், பெண் கிடைக்காமல் ஒருகட்டத்தில் சோர்வாகி போனார்... இந்நிலையில் கடந்த வருடம் சில புரோக்கர்கள் சேகருக்கு அறிமுகமானார்கள்.. கண்டிப்பாக திருமணத்துக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து தருவதாக உறுதி ஆனால் புரோக்கர் கமிஷனாக 4 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்கள்.
எப்படியும் தனக்கு திருமணம் நடந்துவிடும் என்பதால், 4 லட்ச ரூபாய் கமிஷனாக தருவதற்கு சேகரும் ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து, ஷிவமொக்காவை சேர்ந்த மஞ்சுளா என்ற 30 வயது பெண்ணை, சேகருக்கு வரனாக காட்டினார்கள்,.
மஞ்சுளாவுடன் திருமணம்: மஞ்சுளாவை சேகருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், முதோல் நகரின் காளிகாம்பா கோவிலில், புரோக்கர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஏற்கனவே பேசியபடி 4 லட்சம் ரூபாயையும் கமிஷனாக வாங்கி கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்கள்.
ஒருவழியாக கல்யாணம் நடந்துவிட்டதால், படுகுஷியில் காணப்பட்டார் சேகர்.. ஆனால், ஒரு மாதம்தான் இந்த மகிழ்ச்சி நீடித்திருந்தது.. புதுமனைவி மஞ்சுளா, சேகரை வீட்டை விட்டு ஓடிவிட்டார்.. இதனால் மனம் நொந்துபோன சேகர், தன்னுடைய மனைவியை தேடி ஒவ்வொரு பகுதியாக தேடி அலைந்தார்.. அந்தவகையில் ஷிவமொக்காவுக்கு சென்றும், தன்னுடைய மனைவியை தேடினார்.
புரோக்கர்கள்: அப்போதுதான் மஞ்சுளாவின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்தது.. மஞ்சுளாவுக்கு ஏற்கனவே 2 கல்யாணம் ஆகிவிட்டது. 3வதாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேகர் ஆவேசத்தின் உச்சிக்கு போனார்.
உடனே 4 லட்சம் கமிஷனை வாங்கி கொண்டுபோன புரோக்கர்களை தொடர்பு கொண்டு சத்தம் போட்டார்.. தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால், பணத்தை தரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள்.. இதனால் மனம் நொந்துபோன சேகர், முதோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் தற்போது புரோக்கர் சத்யப்பா, மஞ்சுளா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை: பாகல்கோட் மாவட்ட எஸ்பி இதுகுறித்து சொல்லும்போது, "திருமண மோசடி கும்பல் ஒன்று பணத்தை பறிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.. இவர்கள் பெலகாவி, ராமதுர்கா, ஷிவமொகா, தார்வாடை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது... அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.. பாகல்கோட் மாவட்டத்தில் இதுபோன்று இதற்கு முன்பு நடந்தது கிடையாது.. இதுதான் முதல்முறை.. சம்பந்தப்பட்ட மோசடி கும்பலை பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications