கழிவறைக்கு போன தொழில் அதிபர்.. படுக்கை அறையில் இளம் பெண் செய்த வேலை.. ஆடிப்போன கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளிடம் வசீகரமாக இளம் பெண் ஒருவர் பேசி வலையில் வீழ்த்துகிறார். பின்னர் 'ஹனிடிராப்' முறையில் நகை-பணம் பறித்து வந்தாராம். அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பெலகாவியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் நடந்த சம்பவத்தால் இளம் பெண் சிக்கியுள்ளார்.
ஒருவரை ஆசைவார்த்தை கூறி டிராப் செய்து வரவழைத்து, அவரை சபலப்படுத்தி பணம் பறிக்கும் டெக்னிக்கை சில பெண்கள் பயன்படுத்துகிறார்கள். ஹனிடிராப் எனப்படும் இந்த முறையில் பல தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள் பணத்தை இழந்துள்ளர்கள். கர்நாடகாவில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமாகியிருக்கிறார். உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அவரை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தாராம் அந்த பெண். தொழிலதிபர் குளிக்கச் சென்ற நேரத்தில் அவர் படுக்கையில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு அந்த பெண் தப்பியோடிவிட்டாராம்.
பின்னர் மர்ம நபர்களுடன் சேர்ந்து கொண்டு அந்தத் தொழிலதிபரை மிரட்டி பணமும் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த திலக்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குறித்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலதிபரை ஹனிடிராப் முறையில் அழைத்துச் சென்று நகை-பணத்தைப் பறித்தது பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுராவைச் சேர்ந்த 33 வயதாகும் தீபா அவடகி என்பதும், இவர் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தீபாவை பிடிக்க முடிவு செய்த போலீசார், அவரை போலவே பொறி வைத்துப் பிடிக்க வலை விரித்தனர், அதன்படி அவருடன் போலீசாரே ஒருவரை தயார் செய்து பேச வைத்து வேறு ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார்கள். அங்கு வந்ததும் தீபாவை போலீசார் கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தீபா, பெலகாவி மாவட்டம் ஹுக்கேரியைச் சேர்ந்த சிவானந்த் என்பவரைக் காதலித்து வருவது தெரியவந்தது. அவர் தான் 'ஹனிடிராப்' முறையில் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை குறிவைத்து பணம், நகை பறித்து மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இருவரும் கிடைக்கும் பணத்தை இருவரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார்கள்.
இதையடுத்து தீபாவிடம் இருந்து 2 கார்கள், 11 செல்போன்கள் உட்பட ரூ.32 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் காதலன் சிவானந்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெலகாவி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications