Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப்: நாங்கள் என்ன நினைத்தோமோ.. அதையே கர்நாடகா ஹைகோர்ட்டும் தீர்ப்பா சொல்லிடுச்சி.. குஷ்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஹிஜாப் விவகாரத்தில் பாஜகவாகிய நாங்கள் என்ன நினைத்தோமோ அதையே கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் தெரிவித்தார்.

Recommended Video

    ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமில்லை - கர்நாடக உயர் நீதிமன்றம்

    கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிய கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் வந்தனர்.

    ஆனால் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளிகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள் என அறிவுறுத்தப்பட்டது.

    ஹிஜாப் விவகாரம்

    ஹிஜாப் விவகாரம்

    இதையடுத்து கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் ஹிஜாப் விவகாரம் தலைத்தூக்கியது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வந்த மாணவியை முற்றுகையிட்ட இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

     கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு

    கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு

    பதிலுக்கு அவரும் அல்லா ஹூ அக்பர் என முழங்கினார். இது போன்று நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

    ஹிஜாப் தடை செல்லும்

    ஹிஜாப் தடை செல்லும்

    இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விசயமல்ல என்று கூறினர். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள் கர்நாடக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டனர். ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

    தீர்ப்பை வரவேற்ற குஷ்பு

    தீர்ப்பை வரவேற்ற குஷ்பு

    இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஹிஜாப் விவகாரத்தில் நாங்கள் (பாஜக) என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதையே கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது. இதில் எந்த சமரசமும் இல்லை.

     ஜெய்ஹிந்த் சொன்ன குஷ்பு

    ஜெய்ஹிந்த் சொன்ன குஷ்பு

    எதிர்க்கட்சியினர் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். கல்வி நிறுவனங்களுக்கு உங்கள் மதத்தை கொண்டு செல்லாதீர்கள். உங்கள் ஒற்றுமை, இந்தியர் என்ற அடையாளம், ஒற்றுமை ஆகியவற்றை பெருமையுடன் கொண்டு செல்லுங்கள். ஜெய் ஹிந்த் என தனது ட்வீட்டில் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+