கர்நாடகாவில் கன்னடம் படி..இல்லை எனில் வெளியேறு- தமிழர் உள்ளிட்டோருக்கு வாட்டாள் நாகராஜ் மிரட்டல்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பிற மாநிலத்தவர் கன்னட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும்; கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்திய மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொகுதி மறுசீரமைப்பபு விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் கூட்டத்தை கர்நாடகா அரசு புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 22-ந் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவின் எல்லையான பெலகாவியில் அண்மையில் கன்னட மொழி நடத்துநர், ஓட்டுநரை மராத்தி மொழி பேசுவோர் தாக்கினர்; இதற்கு பதிலடியாக மராத்தி மொழி பேசும் ஓட்டுநர்- நடத்துநர் தாக்கப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களிடையே எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வரும் 22-ந் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வாட்டாள் நாகராஜ் கூறுகையில், கன்னடர்களைத் தாக்கிய மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 22-ந் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் மாநிலங்களின் கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அத்துடன் கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து பிற மொழியினரும் கட்டாயம் கன்னட மொழியை படித்தாக வேண்டும்; அப்படி கன்னட மொழியை படிக்க மறுக்கும் தமிழர் உள்ளிட்ட பிற மொழியினர் கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என்றார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் யார்?
கர்நாடகாவில் கன்னட இனவெறியைத் தூண்டும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது வாட்டாள் நாகராஜின் வாடிக்கை. குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களை அடிக்கடி நடத்துபவர். தமிழக எல்லை பகுதிகளில் போராட்டம் நடத்தி அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்குகிறவர்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications