பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் எங்கிருந்தாலும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்கலாம்.. இதோ வாய்ப்பு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: உலகில் எங்கிருந்தாலும் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளுக்கு தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில் இணைய வழியில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது. ஜூன் மாதத்துக்கான அட்மிஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய தொழில் முறை சார்ந்த வாழ்க்கையினால் பலரும் சொந்தஊர், சொந்தமாநிலம், சொந்த நாட்டை விட்டு வெளியே சென்று பணி செய்யும் நிலை உள்ளது. இவ்வாறு செல்லும் ஏராளமானவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலேயே வசிக்க துவங்கி விடுகின்றனர்.

ஆம் ஆத்மி நிர்வாகிகளை பாஜகவில் இணையுங்க! தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களுக்கு மேலிடம் கட்டளை ஆம் ஆத்மி நிர்வாகிகளை பாஜகவில் இணையுங்க! தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களுக்கு மேலிடம் கட்டளை

இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோருக்கு தமிழ் மொழி தெரிந்தாலும் கூட வேலைப்பளுவின் காரணம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கடைசிவரை அந்த குழந்தைகளுக்கு தமிழ் கற்க முடியாத நிலை உள்ளது.

 பெங்களூர் தமிழ் அறக்கட்டளை

பெங்களூர் தமிழ் அறக்கட்டளை

இதனை தடுக்கும் வகையில் தான் ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு'அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன்படி உலகில் எங்கு இருந்தாலும் கூட குழந்தைகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் தமிழ் கற்கும் வாய்ப்பை ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு' ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

4 வார வகுப்பு

4 வார வகுப்பு

தமிழ் கற்று கொடுக்கும் வகுப்பானது மொத்தம் 4 வாரங்கள் நடக்கும். வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புகள் உண்டு. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தற்போது ஜூன் மாதத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

4 வார வகுப்பு

4 வார வகுப்பு

தமிழ் கற்று கொடுக்கும் வகுப்பானது மொத்தம் 4 வாரங்கள் நடக்கும். வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புகள் உண்டு. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தற்போது ஜூன் மாதத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

4 படிநிலைகளில் வகுப்புகள்

4 படிநிலைகளில் வகுப்புகள்

மொத்தம் 4 படிநிலைகளில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது. அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு எனும் தலைப்பில் எழுத்துக்கள், சொற்கள், சொற்றொடர், உரையாடல்கள் என 4 படிநிலைகள் உள்ளன. முதல்படிநிலைக்கு https://forms.gle/tsfckCbLUtRv9kiR7 , இரண்டாம் படிநிலைக்கு https://forms.gle/xotNueJGfbb5gjpd8 , மூன்றாம் படிநிலைக்கு https://forms.gle/K1nmAkBvsR93PCDbA, 4ம் படிநிலைக்கு https://forms.gle/XktDofzas4Mh2siNA இதில் பதிவு செய்து மே 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.தொடர்புக்கு

கூடுதல் விவரங்களை தமிழ் அறக்கட்டளை பெங்களூரு 9483755974, 9820281623 ஆகிய எண்களை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். [email protected] இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil is being teach through online on behalf of the Tamil Foundation Bangalore to the children of people of abroad. The Admission of June month is open
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X