உடுப்பி கடற்கரையில் பிகினி அணியக் கூடாதா.. போலீஸிடம் மல்லுக்கட்டிய சோஷியல் மீடியா பிரபலம்
பெங்களூர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாடல் மற்றும் சோஷியல் மீடியா இன்புளூயன்ஸரான பெண் ஒருவர் உடுப்பி, படுகரே கடற்கரையில் பிகினி உடையில் போட்டோ மற்றும் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது போலீஸாரால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ரீல்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
படுகரே கடற்கரையில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது அநாகரீகமாக உடையணிந்திருப்பதாகக் கூறி போலீஸார் அவரைத் தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக எந்தப் பதிவும் இல்லை என்றும், புகைப்படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் மால்பே போலீஸார் பிடிஐயிடம் தெரிவித்துள்ளனர்.

யூடியூபர்கள், சோஷியல் மீடியா இன்புளூயன்ஸர்கள் பலரும் புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு மக்களின் லைக்ஸ்களை குவிப்பது வழக்கம். ஃபாலோவர்ஸ்களை தக்கவைப்பதற்காக இவர்களும் டிசைன் டிசைனான உக்திகளுடன் கூடிய வீடியோக்களை களத்தில் இறக்குவதும், சாதாரணமான சில வீடியோக்கள் கூட சில நேரங்களில் பெரிய அளவில் ரீச் ஆவதும், அதே சமயத்தில் சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாடலும், சோஷியல் மீடியா இன்புளூயன்ஸருமான கியாதி ஸ்ரீ என்பவர் பிகினி உடையில் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது போலீஸாரால் தடுக்கப்பட்டதுடன், பொதுமக்களும் அப்பகுதியில் கூடியதால் சம்பவ இடத்தைவிட்டு உடனடியாக காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கியாதி ஸ்ரீ. இவர் மாடலாகவும், சோஷியல் மீடியா இன்புளூயன்ஸராகவும் உள்ளார். இந்நிலையில், ரீல்ஸ் ஷூட் செய்வதற்காக உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரைக்கு வியாழக்கிழமை தனது கணவருடன் சென்றுள்ளார். அங்கு கியாதி ஸ்ரீ பிகினி உடையுடன் இருப்பதை அவரது கணவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அப்பகுதிக்கு வந்த போலீஸார் இருவர் கியாதி ஸ்ரீயிடம் அவர் அணிந்திருக்கும் உடைக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், முன் அனுமதி பெற வேண்டும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் பொதுமக்களின் கூட்டம் கூடவே பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக உணர்ந்த கியாதி ஸ்ரீயும், அவரது கணவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
இதுகுறித்து கியாதி ஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், உடுப்பி கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு மிகவும் கசப்பான ஒரு அனுபவம் ஏற்பட்டது. நான் அப்போது அங்கு அணிந்திருந்த பிகினி உடையை மாற்றிக் கொள்ள வேண்டும் என போலீஸார் எங்களிடம் அறிவுறுத்தினர்.
ஏன் உடையை மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டபோது, தவறாக நடந்துகொண்டால் உள்ளூர்வாசிகள் எங்களைத் தாக்கக்கூடும் என்று போலீஸார் எங்களை எச்சரித்தனர். பிகினி போட்டோ ஷூட் செய்வதில் என்ன தவறு என்று கியாதி ஸ்ரீ உடுப்பி காவல் துறையினரிடம் சமூக ஊடகம் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கியாதி ஸ்ரீ இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட்டிருந்தார். வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமாக வியூஸ்களை குவித்தது. சுமார் 50 ஆயிரம் பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications