பெங்களூரில் வாக்கிங் போன நடுத்தர வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கண்ட இடத்தில் கை வைத்த டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் தனியாக நடைபயிற்சி சென்ற நடுத்தர வயது பெண்ணை, திடீரென ஓடிவந்து டேக்சி டிரைவர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோனனகுண்டே அருகே நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து வீடுகளில் உள்ள தோழிகளுடன் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2 ஆம் தேதி அன்றும் அந்த பெண் வழக்கம்போல் அதிகாலையில் பக்கத்து வீட்டு தோழிகளுடன் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் வாயை பொத்தி கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தகாத செயலில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டப்படி பிடியில் இருந்து நழுவி கத்திக்கொண்டே சிறிது தூரம் ஓடினார். எனினும் விடாமல் துரத்திய அந்த நபர் மீண்டும் பெண்ணை பிடித்து வாயை பொத்தினார். ஆனால் அந்த பெண் பிடியில் இருந்து நழுவினார்.
இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பெண் கத்துகின்ற சத்தத்தை கேட்டு நாய்களும் குரைத்தன. இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் நகரில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்கின்ற பெண்ணுக்கே இந்த நிலைமையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியை பார்த்த பெங்களூர் தெற்கு டிஜிபி லோகேஷ், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இதில் அந்த நபர் பெயர் சுரேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. டேக்சி டிரைவர் என்பதும், பல்வேறு நிறுவன பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் கேப் டிரைவராக பணியாற்றியதும் தெரியவந்தது.
அதே வேளையில், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் பெண்கள் தனியாக நடைபயிற்சியில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று பெங்களூரில், ஐடி துறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐடி துறையை சேர்ந்த டெக் ஊழியர்கள் பணி செய்து வரும் பெங்களூரில், பெண்களின் பாதுகாப்புக்கு கேள்வி எழுப்பும் வகையில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும், இதுபோன்ற தகாத செயல்கள் நடக்காமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications