லிப்லாக் சேலஞ்ச்!முத்தமிட்டு கொண்ட மாணவ-மாணவிகள்! வெளியான வீடியோ.. பரபர கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் லிப்லாக் சேலஞ்ச் நடத்திய வீடியோ இணையதளத்தில் வெளியான நிலையில் சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளில் சிலர் கல்வி நிறுவனங்கள் அல்லது பொது இடங்களில் விரும்பதகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சமீப காலமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கர்நாடகத்தில் மாணவ-மாணவிகள் ‛லிப்லாக் சேலஞ்ச்' நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

 லிப்லாக் சேலஞ்ச்

லிப்லாக் சேலஞ்ச்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூர் உள்ளது. இங்கு பிரபலமான கல்லூரிகள் உள்ளன. இதனால் கர்நாடகத்தின் பிற இடங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மாணவிகள் வந்து தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் தான் மங்களூரு நகரில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் வீடு ஒன்றில் உதட்டு முத்த போட்டி(லிப் லாக் சேலஞ்ச்) நடத்தியுள்ளனர்.

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த வீடியோவில் ஒரு அறையில் சில கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளனர். அதில் கல்லூரி மாணவனும், மாணவியும் உதடோடு உதடு வைத்து முத்தமிடுகின்றனர். இதனை ஒருவர் வீடியோ எடுக்க சிலர் அந்த மாணவ-மாணவியை உற்சாகப்படுத்துகின்றனர்.

விசாரிக்க கோரிக்கை

விசாரிக்க கோரிக்கை

தற்போது இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் இந்த வீடியோவில் உள்ள மாணவி கல்லூரி ஒன்றின் சீருடையை அணிந்து உள்ளதால் இதுபற்றி விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனால் மங்களூர் போலீசாரும் விசாரணையை துவங்கினர்.

கல்லூரி மாணவர் கைது

கல்லூரி மாணவர் கைது

இந்த விசாரணையின் அடிப்படையில் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவத்தின்போது மாணவர்கள் போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ வெளியானது எப்படி?

வீடியோ வெளியானது எப்படி?

இதற்கிடையே தான் அறையில் நடந்த லிப்லாக் சேலஞ்ச் தொடர்பான வீடியோ எப்படி வெளியானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது லிப்லாக் சேலஞ்ச் நடந்த இடத்தில் இருந்த மாணவர் ஒருவரால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கலாம் எனவும், அதன்பிறகு தான் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+