Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மங்களூரில் வெடித்து சிதறிய ஆட்டோ! "விபத்து இல்லை. பயங்கரவாத செயல்.." கர்நாடக போலீசார் உறுதி! பதற்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடித்துச் சிதறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக டிஜிபி முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடித்துச் சிதறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

 ஆட்டோ வெடிப்பு

ஆட்டோ வெடிப்பு

கர்நாடகாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் நேற்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என முதலில் தெளிவான தகவல் இல்லை என்பதால் குழப்பம் நிலவியது. இந்த சம்பவத்தில் ஓட்டுநரும் பயணி ஒருவரும் படுகாயமடைந்தார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சிசிடிவி

சிசிடிவி

இந்த வெடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியானது. அதில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் அருகே ஆட்டோ சென்ற போது, திடீரென அதில் வெடி விபத்து ஏற்படுகிறது. இது தொடர்பாகப் பல சிசிடிவி காட்சிகள் வெளியானது. ஆட்டோ பயணி எடுத்துச் சென்ற பிளாஸ்டிக் பையில் இருந்து தான் தீ ஒட்டுமொத்த வாகனத்திலும் பரவியதாகக் கூறப்படுகிறது.

பதற்றம்

பதற்றம்

இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவான நிலையில், இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவான நிலையில், மக்கள் அமைதியாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடித்துச் சிதறியதாகவும் இது பயங்கரவாத செயல் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் இது தொடர்பாகக் கர்நாடக டிஜிபி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 பயங்கரவாத நடவடிக்கை

பயங்கரவாத நடவடிக்கை

இது குறித்து கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தனது ட்விட்டரில், "இப்போது உறுதியாகி விட்டது.. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை.. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல்.. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில போலீசார், மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 கர்நாடக அமைச்சர்

கர்நாடக அமைச்சர்

மத்திய விசாரணை ஏஜென்சிகள் விசாரணைக்கு விரைந்துள்ளதைக் கர்நாடக உள் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உறுதி செய்தார். அவர் கூறுகையில், "மங்களூரில் நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது பயங்கரவாதம் நடவடிக்கையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாநில போலீசாருடன், மத்திய புலனாய்வுக் குழுக்களும் கைகோர்த்து விசாரணை நடத்தும்" என்று அவர் தெரிவித்தார்.

 குக்கர்

குக்கர்

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையில் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

பதற்றம்

பதற்றம்


தமிழ்நாட்டில் கோவையில் கடந்த மாதம் தான் வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அது பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்று கூறிய போலீசார் அந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஓய்வதற்குள்ள, மீண்டும் இப்போது மங்களூரில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+