Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரேட்" பேசியாச்சா? மனசாட்சியே இல்லயா? எகிறிய பிரியங்கா.."ரிவர்ஸ் கியர் போடாதீங்க": உடனே வந்த அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகத்தில் தேர்தல் நெருங்கி வரும்நிலையில், காங்கிரஸ் - பாஜக இரு கட்சிகளுமே உச்சக்கட்ட டென்ஷனை அடைந்துள்ளன.. இரு கட்சிகளுமே மாறி மாறி ஊழலை அள்ளி வீசி, மாநிலத்தை கதிகலங்க செய்து கொண்டிருக்கின்றன..!!

தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும்தான் பாஜக காலை பதித்துள்ளது.. அதுவே இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.. நடந்து முடிந்த கருத்து கணிப்புகளை எடுத்துக்கொண்டால், சொல்லிக்கொள்ளும்படியான ரிசல்ட்டுகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

Mass Strategies by karnataka Congress and what did Priyanka gandhi say about PM Modi

அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்ப‌தாக கணிப்புகள் வெளிவந்திருந்தது, பாஜகவை அதிர வைத்தது..

டெண்டர்கள்: இத்தனைக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, கர்நாடகத்திற்கு 8 முறை பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..

அதனால், காங்கிரஸ் இந்த முறை கர்நாடகத்தை விடுவதாக இல்லை.. ராகுல்காந்தியின் நடைபயணம் பெருத்த பலத்தை நாடுமுழுவதும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கர்நாடகத்தில் சற்று அதிகமாகவே எதிரொலித்துவருகிறது.. போதாக்குறைக்கு எம்பி பதவியை பறிக்கவும், சூடாகிவிட்ட கதர் தொண்டர்கள், பாஜகவை வீழ்த்த ஒன்றுதிரண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், கர்நாடக காங்கிரஸ் உத்வேகம் கொண்டு எழுந்துள்ளது.. அதனால்தான், பாஜகவையும் தாண்டி, காங்கிரஸின் எழுச்சி கர்நாடகத்தில் பலமாக பேசப்பட்டு வருகிறது..

லிங்காயத்து ஓட்டுக்கள்: போதாக்குறைக்கு எடியூரப்பா, பொம்மை ஆகியோரின் மோதலும், ஊழலும், காங்கிரசுக்கு வலுவாகி கொண்டிருக்கிறது.. அத்துடன், லிங்காயத்து சமூகத்தினரின் ஓட்டுக்களையும், இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பிரதானமாக நம்பி உள்ளது. ஆனால், முஸ்லிம் வாக்குளை குமாரசாமி எந்த அளவுக்கு பிரிப்பார் என்பதையும் கணக்குபோட வேண்டி உள்ளது.. ஆக, காங்கிரசுக்கு ஒருபக்கம் பாஜக என்றால், மறுபக்கம் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் மல்லுக்கட்டி நிற்கிறது.. இந்த 2 தரப்பையும் காங்கிரஸ் சமாளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது..

Mass Strategies by karnataka Congress and what did Priyanka gandhi say about PM Modi

கிட்டத்தட்ட இந்த 2 தரப்புமே ஒன்றுதான் என்றாலும், எந்த சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு பிரிய போகிறது என்பதைவைத்துதான் வெற்றி தோல்வி இங்கு நிர்ணயிக்கப்பட உள்ளது.. பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில்கூட, இப்படி முட்டி மோதி பிரச்சாரத்தை நடத்தியதில்லை.. அந்த அளவுக்கு கர்நாடக காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.. இதற்காகவே, லிங்காயத்துகளின் இடஒதுக்கீட்டை 5-லிருந்து 7 சதவீதமாக உயர்த்த பாஜக பிளானை போட்டுள்ளது.
லிங்காயத்துகளை தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் போதும், ஓரளவு சரிக்கட்டிவிடலாம் என்று நினைக்கிறது.. ஒருவேளை, "தொங்கு சட்டசபை" அமைந்துவிட்டால், லட்டுபோல தங்களுக்கு சான்ஸ் கிடைத்துவிடும், ஆட்களை இழுத்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என்று பாஜக நம்பி கொண்டிருக்கிறது.. முகாமில் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்கள், ஸ்டார் பேச்சாளர்களாக களமாடி கொண்டிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கல்லறை வெட்டுகிறார்களா: அதேபோல, காங்கிரஸ் தரப்பிலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்... இரு தரப்புமே மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விமர்சனங்களை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.. இதில் நேற்றைய தினம் பிரியங்காவின் பிரச்சார நெடி சற்று காட்டமாகவே எதிரொலித்து கொண்டிருக்கிறது.. "எதிர்க்கட்சியினர் எனக்கு கல்லறை வெட்டுவதில் குறியாக இருக்கின்றனர்" என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது... இந்த நாட்டில் ஒரு பிரதமருக்கு கல்லறை வெட்ட யாரும் நினைக்க மாட்டார்கள்.. தேர்தலுக்காக இப்படி பேசுவதையே மோடி வழக்கமாக வைத்திருக்கிறார்.

Mass Strategies by karnataka Congress and what did Priyanka gandhi say about PM Modi

மாரடைப்பு வருகிறது: 1.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் இருந்தும், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி "ரேட்" பாஜக நிர்ணயித்திருப்பதை கேட்கும்போது, இளைஞர்களுக்கு மாரடைப்பே வருகிறது.. 40% பாஜக அரசு வெட்கமின்றி, மனசாட்சியின்றி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது. ஒப்பந்ததாரர் மரணம், போலீஸ் நியமன ஊழல் இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.. கர்நாடக மக்களே, உங்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பாஜக அரசை தூக்கி எறிந்துவிட்டு, உங்கள் கலாசாரம், நலன்களைப் புரிந்து உங்களை மேம்படுத்தும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" என்று பிரியங்கா கேட்டுக் கொண்டது, கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

ஆனால், இதற்கு அமித்ஷா பதிலடி தந்துள்ளார்.. பெல்காம் மாவட்டத்தில் பேசிய அமித்ஷா, "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கலவரங்கள்தான் அதிகரிக்கும். மக்கள் நிம்மதி இழக்க நேரிடும். தப்பித் தவறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்கூட, இதுவரை இல்லாத அளவில் காங்கிரஸின் ஊழல் உச்சத்தை எட்டிவிடும்.. பாஜக 40% ஊழல் செய்கிறது என காங்கிரஸ் சொல்கிறதே..

அனல் நெடி: இதை நிரூபிக்க ஏன் அவங்க கோர்ட்டுக்கு போகவில்லை? காங்கிரஸில் இணைந்திருக்கும், ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமணன் சவாதியால், காங்கிரஸ் ஒரு பிரயோஜனமும் இல்லை.. புதிய கர்நாடகத்தை உருவாக்க, மக்கள் 'டபுள் இன்ஜின்' பாஜகவுக்கு ஓட்டுப்போட வேண்டும். ஊழல் செய்யும் 'ரிவர்ஸ் கியர்' காங்கிரஸை தவிர்க்க வேண்டும்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.. நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்தலில், இரு கட்சிகளுமே மாறி மாறி ஊழலை சொல்வதல், கர்நாடக களத்தில் கனல் தெறித்து விழுந்து கொண்டிருக்கிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+