இஎம்ஐ கட்டாத பெண்.. வீட்டுக்குள் புகுந்து கியாஸ் சிலிண்டரை தூக்கி.. அதிர வைத்த பைனான்ஸ் ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடகத்தில் நிதி நிறுவனத்தின் தொல்லை காரணமாக பலர் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மைசூருவில் மாத தவணை செலுத்தாததால் வீட்டுக்குள் புகுந்து கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை பல கோடியை தாண்டும். அதேநேரம் இந்த கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு சூழலில் இல்லாதவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவது, அசிங்கமான பேச்சுகள், மோசமான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மரியாதைக்குறைவாக நடத்தப்படுகிறார்கள். அதேநேரம் அவர்களின் வாழ்வாதாரங்களும் சில நேரங்களில் கடனுக்கு ஈடாக பிடுங்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை நிதி நிறுவனத்தின் தொல்லையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், மைசூருவில் நிதி நிறுவனத்தில் மாத தொகை செலுத்தாததால் சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு டவுன் மகாதேவபுரா பிலிம்போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாகிதா என்பவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வாகிதா அப்பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு மாதந்தோறும் வட்டி, தவணை தொகை செலுத்தி வந்துள்ளாராம். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாத தவணை தொகை நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த வாரம் வாகிதா வீட்டிற்கு வந்து தவணை கேட்டுள்ளனர்.
அதற்கு கணவர் உடல் நிலை சரியில்லை. அடுத்த வாரம் தருகிறேன் என வாகிதா அவர்களிடம் கூறினாராம். ஆனால் சொன்னபடி வாகிதா பணத்தை தரவில்லையாம். இதனால் நேற்று காலை மீண்டும் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தொகையை வசூலிக்க வாகிதா வீட்டிற்கு சென்று கடன் தொகை கேட்டுள்ளனர். அதற்கு தற்போது பணம் இல்லை 2 நாட்கள் கழித்து தருகிறேன் என வாகிதா கூறினாராம்.
இதனால், கோபமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் வாகிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆத்திரத்துடன் வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்து சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்காக அந்த பகுதி மக்கள் கூட ஏன் என்று கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வாகிதா ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாத தொகை செலுத்தாததால் வீட்டுக்குள் புகுந்து தனியார் நிறுவன ஊழியர்கள் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற சம்பவம் மைசூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications