Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாவூத் "கனெக்ஷன்?" சிறையில் இருந்தவாறு நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்! பெலகாவி விரைந்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும் நிதின் கட்கரி. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த இவர் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். நாக்பூரில் நிதின் கட்கரியின் அலுவலகமும் அமைந்துள்ளது.

நேற்று காலை 11.30 மணியளவில் நாக்பூரில் உள்ள கட்கரி அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்ட சிலர் அவரை மிரட்டி ரூ.100 கோடி பணம் கேட்டுள்ளனர். மேலும், தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 நிதின் கட்கரி

நிதின் கட்கரி

மும்பையில் பிரபல நிழலுக தாதா நிதின் கட்கரி பாகிஸ்தானில் இப்போது பதுங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை இந்தியா அழைத்து வர எடுக்கப்பட்டு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அதேநேரம் அவர் பாகிஸ்தானில் இருந்தபடியே இந்தியாவில் தனது அடியாட்கள் மூலம் முக்கிய நபர்களை மிரட்டி பணத்தை வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படித்தான் நாக்பூரில் உள்ள கட்கரி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். மொத்தம் மூன்று முறை மத்திய அமைச்சர் அலுவலகத்திற்குக் கால் வந்துள்ளது.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இது தொடர்பாக போலீசாருக்கு நிதின் கட்கரி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிதின் கட்கரிக்கும் அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கால் வந்த எண்ணை டிரேஸ் செய்துள்ளனர். இந்த போன்கால் கர்நாடகாவில் இருந்து வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து கால் வந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

 பிரபல தாதா

பிரபல தாதா

நிதின் கட்கரிக்கு மிரட்டல் விடுத்த நபர் மோசமான தாதாவாக கருதப்படும் ஜெயேஷ் காந்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது பெல்லாரி சிறையில் உள்ள ஜெயேஷ் காந்தாவின் டைரியையும் சிறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மகாராஷ்டிர போலீசார் ஜெயேஷ் காந்தாவிடம் விசாரிக்க பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு விரைந்துள்ளனர்.

 விசாரணை தீவிரம்

விசாரணை தீவிரம்

சிறையில் உள்ள ஒரு நபரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாக்பூர் போலீசார், விசாரணை இப்போது முதற்கட்டத்தில் உள்ளதாகவும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இது குறித்துத் தெளிவாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்துவிட்டனர். மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான நிதின் கட்கரிக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+