Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரயான் 3 தரையிறங்கியதை நாசா படம் பிடித்ததா? இணையத்தில் உலவும் போட்டோக்கள்! உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 இறங்கி வரலாற்று சாதனையை படைத்த நிலையில், நாசாவின் செயற்கைக்கோள் இதனை படம் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதத்தில் சில புகைப்படங்களும் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து பலரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் நிலவின் மற்ற பகுதிகளை குறி வைத்து செயற்கைக்கோள்களை அனுப்பிக்கொண்டிருந்த நிலையில், இஸ்ரோ மட்டும் நிலவின் தென் துருவத்தை குறிவைத்து பயணிக்க தொடங்கியது. இந்த பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. எனவே இங்கு நீர் இருக்கலாம் என்று எழுந்த சந்தேகம்தான் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்தது.

NASA satellite captures Chandrayaan 3 Vikram lander landing on moon? Fact check

இப்படியாக இந்த பயணத்தின் முதல் சாதனையை சந்திரயான்-1 விண்கலம் படைத்தது. அதாவது இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மோத வைக்கப்பட்டது. அதன் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் நீர் இருப்பது உறுதியானது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால் இந்த வரலாற்று சாதனையை திரித்து கூறும் விதமான சில புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி ட்ரெண்டாக தொடங்கின.

அதாவது, நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவை ஆய்வு செய்ய தொடங்கியது. இப்படி அது வெளியே வந்தபோது ரோவர் கடந்து சென்ற இடம் முழுவதும் முத்திரை பதிப்பது போன்று இந்தியாவின் சின்னத்தையும், இஸ்ரோவின் பெயரையும் பதிய வைத்து சென்றிருப்பதை போல புகைப்படம் இருந்தது. ஆனால் இது குறித்து ஆய்வு செய்ததில் இது போலி என்றும், பிரக்ராயன் ரோவர் சக்கரத்தின் தடயம் மட்டுமே நிலவில் அச்சு போல பதிந்திருந்தது என்பதும் பின்னர் தெரிய வந்தது.

அதேபோல, சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய தருணத்தை அமெரிக்காவின் நாசா சேட்டிலைட் படம்பிடித்திருக்கிறது என்றும் வீடியோக்கள் சில பரவி வருகின்றன. மற்றொரு பக்கம், நிலவின் தரை பகுதியில் இருக்கும் ஒரு செயற்கைக்கோளை படம் பிடித்து, அதை சந்திரயான் 3 என்றும், அதனை போட்டோ எடுத்தது நாசாவின் செயற்கைக்கோள் என்றும் போட்டோக்கள் பரவி வருகின்றன. ஆனால் இவை இரண்டும் போலியானது.

அதாவது முதலில் உள்ள வீடியோ கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாவது இருக்கும் போட்டோக்களில் நிலவின் தரையில் இருக்கும் லேண்டர்கள் அமெரிக்காவின் அப்பலோ 11 லேண்டராகும். இந்த போட்டோக்கள் கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இணையத்தில் உலாவி வருகிறது. எனவே சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் விண்ணில் இறங்கும்போது அதை எந்த செயற்கைக்கோளும் போட்டோ/வீடியோ எடுக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+