4-வயது மகனை கொன்ற வழக்கு.. பெங்களூர் பெண் அதிகாரியின் கணவர் போலீசாரிடம் சொன்னது என்ன?
பெங்களூர்: கடந்த 5 வாரங்களாக மகனை பார்க்க சுசனா சேத் தனக்கு அனுமதி அளிக்கவில்லை என்று போலீஸ் முன்பாக விசாரணைக்கு ஆஜரான வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பெங்களூர் யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி சுசனா சேத் என்ற பெண் வசித்து வந்தார். தனியார் நிறுவன சிஇஒ -வாக இருந்த இவர் தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்குக் 4 வயதில் சின்மையை என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில், தனது மகனுடன் கோவாவுக்கு சென்ற சுசனா சேத், அங்குள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தனது மகனை கொலை செய்தார். மகனின் உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களுருக்கு வாடகைக்கு கார் பிடித்து புறப்பட்டு சென்றார். ஹோட்டலில் அறையை புக் செய்யும் போது மகனுடன் வந்தவர் செல்லும் போது தனியாக சென்றதும் அறையில் ரத்தகறை இருந்ததும் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது.
இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார், சுசானா சேத் சென்ற கார் டிரைவரை தொடர்பு கொண்டு சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா காவல் நிலையம் செல்லுமாறு கூறினர். அதன்படி காரை டிரைவரும் ஐமங்களா காவல் நிலையம் ஓட்டி சென்றார். பின்னர் போலீசார் காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது தான், சுசனா சேத் மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து பெங்களூரு கொண்டு செல்ல திட்டமிட்டது அம்பலமானது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசானாவை கைது செய்த போலீசார் அவை 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடக்கும் போது இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட் ரமணன் பெங்களூருக்கு விரைந்தார்.
அவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் வெங்கட் ரமணன் இன்று விசாரணைக்கு செல்லும் போது அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குவிந்து இருந்தனர். எனினும், செய்தியாளர்களிடம் பேச மறுத்த வெங்கட் ரமணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்" கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications