1985-க்குப் பின் கர்நாடகாவில் எந்த ஒரு கட்சியும் 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை
பெங்களூர்: கர்நாடகாவில் 1985ம் ஆண்டுக்கு பின் எந்த கட்சியும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. இந்த முறை ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜக இருக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இன்று யாருக்கு வாக்களித்து ஆட்சியமைக்கும் உரிமையை தரப்போகிறார்கள் என்பது மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
கர்நாடகா மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 1983ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக ஜனதா தளம் கடசி ஆட்சியை பிடித்தது. அதாவது 1978 வரை நடந்த ஆறு சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்தது.
ஆனால் 1983ல் வென்ற ஜனதாதளம்,1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியமைத்தது, அதன்பிறகு 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனதா தளம் வென்று ஆட்சியமைத்தது. 1999ம் ஆணடு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்த நிலையில், 2004ம் ஆண்டு முதல் முறையாக ஜேடிஎஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது.
2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று கர்நாடகாவில் முழுமையாக ஆட்சி பொறுப்பேற்றது. 2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. 2018ல் பாஜக, காங்கிரஸ், இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பாஜக 104 இடங்களில் வென்றும் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தடலாடியாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்ததால் குமரசாமி முதல்வராக பதவியேற்றார். ஆனால் ஆட்சி ஒரு வருடம் கூட நீடிக்கவிலலை.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சில அதிருபதி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைத்தது, அத்துடன் அங்கு நடந்த இடைத்தேர்தலிலும் பாஜக வென்றதால் ஆட்சியை பாஜக தக்கவைத்தது. முதலில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு பசவராஜ் பொம்மை அங்கு முதல்வராக பதவியேற்றார்.
இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பெரும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. 16வது சட்டசபை தேர்தல் கர்நாடகாவில் இன்று நடக்கிறது.
இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜகவும், எப்படியாவது வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் இருக்கிறன. இவர்களில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக குமாரசாமியின் ஜேஎடிஸ் கட்சியும் இருக்கிறது. கர்நாடகா மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது வரும் மே 13ம் தேதி தெரிந்துவிடும்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications