கசிந்த 1000 ஆபாச வீடியோக்கள்! பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் மீது பாலியல் புகார்! அதிரும் கர்நாடகா
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா ஹாசன் தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா எம்பி பெண்களுடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியானது. கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஒருவர் மகளிர் ஆணையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். அதாவது தேவகவுடாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒன்று முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் இளைய மகன் ஆவார். மூத்த மகன் பெயர் ரேவண்ணா. முன்னாள் அமைச்சரான இவரது மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா.

இந்நிலையில் தான் தற்போதைய லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். இதையடுத்து மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது தொகுதியில் தேர்தல் நெருங்கிய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. அதாவது பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் ஹாசன் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவியது. அதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வீடியோக்களும் இருந்தன.
மேலும் உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானதாகவும் கூறப்பட்டது. அதோடு மொத்தம் 1000 ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் பேசும் பொருளானது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்தது. இந்த வீடியோக்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கர்நாடகா மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கொலை மிரட்டல் விடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா அவரை எப்படி மிரட்டினார்? என்பது தொடர்பான விபரம் புகாரில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புகாரை கர்நாடகா மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி சார்பில் முதல்வர் சித்தராமையா மற்றும் மாில டிஜிபி அலோக் மோகன் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தொடர்ந்து தான் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க சித்தராமையா முடிவு செய்துள்ளார். இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரமாக்க உள்ளது. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்த வீடியோ விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications