விவாகரத்து கேட்டு பிரிந்த மனைவி.. சும்மா இல்லாமல் சேட்டை.. கணவருக்கு மறக்க முடியாத பரிசு
பெங்களூர்: விவாகரத்து கோரி வெளிநாட்டில் பிரிந்து வாழும் மனைவிக்கு மின்னஞ்சல் மூலம் அந்தரங்க வீடியோ அனுப்பிய கணவனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயதாகும் இளைஞர் ஒருவர் வேலை செய்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன சில நாளிலேயே கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதனிடையே அந்த பெண்ணுக்கு வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு போய் அவர் வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு, அவரது கணவர் இ-மெயில் மூலம் அந்தரங்க வீடியோக்களை அனுப்பினார். மேலும் வீடியோக்களுடன் சேர்த்து ஆபாசமான மெசேஜ்களையும் அனுப்பி வந்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண் பெங்களூர் நகரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது சகோதரர் பெங்களூரில் தனது தங்கை சார்பாக போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து பெங்களூர் திரும்பிய அந்த பெண்ணும், தனது கணவர் மீது போலீசில் நேரடியாக புகார் அளித்தார்.
புகாரின்பேரில் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தார்கள். இதுதொடர்பான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், 'விவாகரத்து கோரி பிரிந்து வாழும் மனைவிக்கு அந்தரங்க வீடியோக்களை அனுப்பி மனஉளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது' என நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications