"மக்களே எச்சரிக்கையாக இருங்க.. காங்கிரஸ் ஊக்குவிக்கும் சிந்தனைகள் ஆபத்தானவை.." பிரதமர் மோடி
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகாவை பொறுத்த அளவில் மொத்தமுள்ள உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. பாஜகவை லோக்சபா தேர்தலிலும் வீழ்த்த காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக வரி பகிர்வு, வறட்சி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருப்பதாக கூறி, "காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "காங்கிரஸ் அரசாங்கம் ஊக்குவிக்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்கள் மிகவும் ஆபத்தானது. எங்கள் மகள்கள் தாக்கப்படுகிறார்கள், உணவு விடுதியில் குண்டு வெடிக்கிறது, மதப் பாடல்களைக் கேட்பதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே ஆளும் காங்கிரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எனது சகோதர சகோதரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
கார்ப்பரேட்டரின் மகள் கொலை, பெங்களூரு ஹோட்டலில் குண்டுவெடிப்பு, ஹனுமான் சாலிசாவுக்காக தாக்குதல் என 3 சம்பவங்களை பாஜக இந்த முறை காங்கிரசுக்கு எதிராக கையில் எடுத்திருக்கிறது.
தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அகாரத்தில் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலா ஒரு இடங்களிலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். இருப்பினும் இந்த முறை பெரும்பான்மை பலத்தோடு காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் பாஜகவுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications